ஐரோப்பா

சுவீடனில் இன்று நாடாளுமன்ற தேர்தல் – அரியாசனத்திற்காக மோதும் இரு தலைவர்கள்

  • September 13, 2026
  • 0 Comments

சுவீடனில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மக்டலேனா ஆண்டர்சன் ஆகியோர் பிரதமர் பதவிக்காகப் போட்டியிடுகின்றனர். கடும் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், தீவிர வலதுசாரி கட்சி வெற்றிவாகை சூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. பழமைவாதக் கொள்கை கொண்ட பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் மீண்டும் ஒரு பதவிக்காலத்தைப் பெற முயல்கிறார். ஆனால், அவர் ஆட்சியில் நீடிப்பது ‘ஸ்வீடன் டெமாக்ராட்ஸ்’ (Sweden Democrats) கட்சியின் ஆதரவைப் பொறுத்தே அமையும். […]

ஐரோப்பா

சுவீடன் வாள்வெட்டு சம்பவம் – இரண்டாவது சந்தேக நபர் கைது

  • August 26, 2026
  • 0 Comments

சுவீடனில் கடந்த வாரம் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்வீடன் அரசு வழக்கறிஞர்கள் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இரண்டாவது நபர், கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை முறையாக காவலில் வைக்க நீதிமன்றத்தை நாடுவதா இல்லையா என்பது குறித்து வியாழக்கிழமை முடிவு எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பு குறிப்பிட்டுள்ளது. இரண்டாவது சந்தேக நபர், தாக்குதல் நடத்தியவருக்கு […]

ஐரோப்பா

சுவீடன் வாள்வெட்டுச் சம்பவம் – 18 வயதுடைய இளைஞர் கைது

  • August 22, 2026
  • 0 Comments

சுவீடனின் ஃபாகர்ஸ்டாவில் Fagersta உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதல்தாரி பிறரின் தூண்டுதல் இன்றி தனியாக செயற்பட்டதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், அதிகாரிகள் பாதுகாப்பு கெமராக்களை தற்போது ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, […]

ஐரோப்பா

சுவீடனில் உயர்நிலைப் பாடசாலையில் வாள்வெட்டு

  • August 21, 2026
  • 0 Comments

சுவீடனின் ஃபாகர்ஸ்டாவில் Fagersta உயர்நிலைப் பாடசாலையில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றிவளைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதித்துறை அமைச்சர் குன்னார் ஸ்ட்ரோமர் உறுதிப்படுத்தினார்.

ஐரோப்பா

பின்லாந்தை ஸ்வீடனுடன் இணைக்கும் புதிய ரயில் சேவை

  • August 10, 2026
  • 0 Comments

பின்லாந்தை ஸ்வீடனுடன் இணைக்கும் ஒரு புதிய பயணிகள் ரயில் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 1990-களுக்குப் பிறகு முதன்முறையாக வடக்கு பின்லாந்திலிருந்து தெற்கு ஐரோப்பா வரை நீளும் ஒரு ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு பின்லாந்தில் உள்ள  Oulu  ரயில் நிலையத்தில் குறித்த ரயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இந்த ரயில் தனது சேவையை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

சுவீடனில் தஞ்சம் கோருவோருக்கு முக்கிய செய்தி!

  • June 1, 2026
  • 0 Comments

புலம்பெயர்ந்தோர் தஞ்சம் கோருவதற்கான சட்டவிதிகளில் சில தளர்வுகளை சுவீடன் அரசாங்கம் இன்று  அறிவித்துள்ளது. முன்னதாக  புலம்பெயர் குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டாலும் பதின்ம வயதினர் நாடு கடத்தப்பட வாய்ப்பிருந்தது. இதனை சட்டவல்லுநர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். அதாவது   தஞ்சம் கோரியபோது தங்கள் பெற்றோருடன் ஸ்வீடனுக்கு வந்த சிறார்கள், 18 வயதை எட்டும்போது நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலமை காணப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் நாடு கடத்தப்படும் வயது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு கடத்தப்படும் […]

செய்தி

போரால் ஜெட் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் – ஸ்வீடன் எச்சரிக்கை

  • April 28, 2026
  • 0 Comments

போர்நிலை காரணமாக ஜெட் எரிபொருள் (Jet Fuel) பற்றாக்குறை உருவாகக்கூடும் என ஸ்வீடன் (Sweden) அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்வீடனின் எரிசக்தி அமைச்சர் எப்பா புஷ் (Ebba Busch) இதனைத் தெரிவித்துள்ளார். மிக மோசமான சூழ்நிலை ஏற்பட்டால், ஸ்வீடனில் விமான எரிபொருளுக்குப் பங்கீட்டு முறை அமுல்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், எதிர்கால சந்தை நிலைமையைப் பொறுத்தே தீர்மானம் மேற்கொள்ள முடியும் என எரிசக்தி முகமையின் பொது இயக்குநர் கரோலின் அசெரப் (Caroline Asserup) தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

போர் சூழல் – உணவுக் கிடங்குகளை நிரப்பும் ஸ்வீடன் (Sweden)!

  • October 16, 2025
  • 0 Comments

ஸ்வீடன் (Sweden) தனது பனிப்போர் கால உணவுக் கிடங்குகளை மீளவும் நிரப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுடனான போர் மூளும் அபாயம் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு சுவீடன் நேட்டோ இராணுவ கூட்டணியில் இணைந்தது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக 2026 வரவு செலவு திட்டத்தின் கீழ், தேசிய தானிய இருப்புக்களை உருவாக்க […]

ஐரோப்பா

ஸ்வீடனில் துப்பாக்கிச்சூடு – 06 பேர் படுகாயம் !

  • October 4, 2025
  • 0 Comments

ஸ்வீடனின்  Gävle என்ற நகரில்  இன்று  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 06 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 14 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உணவகங்கள், மதுபான கூடங்கள் நிறைந்த பரபரப்பான சாலையில் இந்த  துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட 06 இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளதுடன்,  அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதல்தாரியான 14 வயது சிறுவன்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், […]