அரபு கட்சியின் வெற்றிக்கு தேர்தல் முறைகேடுகளே காரணம் – நெதன்யாகு குற்றச்சாட்டு
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் அரபு கட்சிகள் பெற்றுள்ள அபரிமிதமான வெற்றிகளுக்கு, ஓட்டுப்பதிவில் நடந்த முறைகேடுகளே காரணம் என்று பெஞ்சமின் நெதன்யாகு ஆதாரங்களை முன்வைக்காமல் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை அரபு தலைவர்கள் முற்றிலுமாக மறுத்ததுடன், நெதன்யாகு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அரபு வாக்காளர்கள் பெருமளவில் பங்கேற்றனர். இது நெதன்யாகுவுக்கோ அல்லது அவரது முக்கிய யூத அரசியல் போட்டியாளர்களுக்கோ எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை கேள்விக்குள்ளாக்கியது. இந்தச் […]




