ஐரோப்பா

பிரித்தானியாவில் பிறந்து 06 வாரங்களே ஆன குழந்தை பலி – புதிய வழிக்காட்டுதல் வெளியீடு

பிரித்தானியாவின் சர்ரே பகுதியில் பிறந்து ஆறுவாரங்களே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைகள் பயன்படுத்தாமல் தாய்ப்பால் ஊட்டுவதற்காக விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு கேரியரில் குழந்தை படுக்கவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது.

இவ்வாறான கேரியர்கள் பாதுகாப்பற்றவை என தொண்டு நிறுவனங்கள்  எச்சரித்துள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தையைத் தூக்கிச் செல்லும் துணி மற்றும் கேரியர்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த அரசாங்கம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

இதற்கமைய   குழந்தைகளை மார்பின் மீது உயரமாக வைத்திருக்கவும், அவர்களின் வாய் மற்றும் மூக்கு பார்வையில் இருப்பதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் துணிகள் இறுக்கமாகப் பொருந்துவதை உறுதி செய்யவும் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்