இலங்கை செய்தி

பிரபாகரனின் வீட்டில் இருந்து மண்ணை எடுத்துச்சென்ற தொல்.திருமாவளவன்

சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன்,

சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியை நேற்று நேரில் பார்வையிட்டார்.

அத்துடன், அங்கிருந்த மண்ணையும் அவர் நினைவுச் சின்னமாக எடுத்துச் சென்றார்.

வல்வெட்டித்துறை – ஆலடிப் பகுதியில் அமைந்திருந்த தலைவர் பிரபாகரனின் இல்லம் முற்றாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்தப் பகுதி வெறும் காணியாகவே காணப்படுகின்றது.

இந்தப் பகுதியில்தான் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினமான நவம்பர் 26ஆம் திகதி, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வருடாந்தம் கேக் வெட்டிப் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது வழக்கமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை