ஐரோப்பா

நோர்வே மன்னர் ஹரால்டின் உடல்நிலைக் கவலைக்கிடம்

நோர்வே மன்னர் ஹரால்டின் Harald உடல்நிலை மோசமடைந்து கவலைக்குரிய நிலையில் இருப்பதாக அரசவை இன்று அறிவித்துள்ளது.

ஐரோப்பாவின் மிக வயதான மன்னரும், 1991 முதல் நோர்வேயின் சடங்கு ரீதியான அரசுத் தலைவருமான ஹரால்ட், ஆகஸ்ட் 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரத்தத்தில்  பாக்டீரியா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராணி சோன்யா மற்றும் பட்டத்து இளவரசர் ஹாக்கன் Haakon ஆகிய இருவரும் திட்டமிட்ட அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்துள்ளனர்.

பட்டத்து இளவரசர் மற்றும் ராணி உட்பட ஹரால்டின் குடும்ப உறுப்பினர்கள், மன்னருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ஓஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்