உலகம் செய்தி

மீட்பு பணி தீவிரம்: 5,000 இற்கு மேற்பட்ட படையினர் களமிறக்கம்

நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் வரை இன்னமும் மாயமாகியுள்ளனர். இப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் வரை இன்னமும் மாயமாகியுள்ளனர். இப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காணாமல் போனவர்களில் சுமார் 700 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலைப் பகுதிகள் நிறைந்த இந்த எல்லை மண்டலம், மலையேற்றப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகம் நடமாடும் பகுதியாகும்.

பாதிக்கப்பட்ட கரடுமுரடான மலைப் பகுதிகளுக்குச் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அங்குச் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் கூடாரங்கள், உணவுகள் மற்றும் அத்தியாவசிய அவசரகால நிவாரணப் பொருட்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மறுபுறம், இந்த கோர அழிவு மற்றும் சேற்று வெள்ளத்திற்கு மத்தியிலும், சில நபர்கள் மரங்களைப் பிடித்துக் கொண்டும் மாடிகளில் ஏறியும் நூலிழையில் உயிர் பிழைத்த அதிசயச் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் 5,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸார் தேடுதல் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை வரை 20 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 125 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவப் பேச்சாளர் ராஜாராம் பஸ்நெட் தெரிவித்துள்ளார்.

மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், அண்டை நாடான இந்தியா வழங்கிய கூடாரங்கள், உலர் உணவுகள் மற்றும் அவசரகால நிவாரணப் பொருட்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழியாக விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி