அரசியல் இலங்கை செய்தி

மலையக தமிழர்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்து!

கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள “நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு ஐக்கிய சோசலிசக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என அதன் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

“மலையகத் தமிழர்” என அடையாளம் வழங்குவதற்கு அப்பால் அவர்கள் அர்த்தமுள்ள பிரஜைகளாக வாழ்வதற்குரிய நிலம் உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் சிறிதுங்க ஜயசூரிய கூறியவை வருமாறு,

“இலங்கையென்பது ஜனநாயக நாடு. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை இருக்கின்றது.

சட்ட ரீதியிலான பிரச்சினையெனில் பொலிஸார் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கலாம். அதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் பெருந்தோட்டப் பகுதிகளில் பொலிஸாரின் செயலை செய்வதற்கு கூலிப்படை களமிறங்குவதை அனுமதிக்க முடியாது.

நீலகாமம் போராட்டமானது இனக்குழுமங்களுக்கு எதிரானது அல்ல. அது அடக்குமுறைக்கு எதிரானது. அராஜகத்துக்கு எதிரானது. அநீதிக்கு எதிரானது.

எனவே, அனைவரும் இந்த அறவழி போராட்டத்துக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும். அந்தவகையில் எமது ஐக்கிய சோசலிசக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும்.

மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்கான எமது குரல் ஓங்கி ஒலிக்கும்.” என்றார் சிறிதுங்க ஜயசூரிய.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!