உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் மீது தாக்குதல் அச்சம்; சமரசப் பேச்சில் கத்தார்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மத்தியஸ்த முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக கத்தார் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மத்தியஸ்த முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக கத்தார் தெரிவித்துள்ளது.

பிராந்தியத்தில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுப்பதற்காக கத்தார் மேற்கொண்டுவரும் இராஜதந்திர முயற்சிகள் தொடர்வதாக, கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னரும், பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் அமெரிக்க நிர்வாகம் ஆர்வத்துடன் இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாட்டை எட்டுவதற்கான வாஷிங்டனின் விருப்பத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாட்டை எட்ட முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“முழுமையானதொரு உடன்பாட்டுக்காகக் காத்திருக்க முடியாது. நல்லதொரு உடன்பாட்டை எட்டுவதே எமது எதிர்பார்ப்பு” என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஈரானின் கெஷ்ம் தீவில் இரண்டு ஏவுகணைகள் விழுந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாக ஈரானின் அரை அரச ஊடகமான தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஈரானுக்குள் உள்ள இலக்குகள் மீது எந்தவொரு தாக்குதலையும் நடத்தியதாக அமெரிக்கா இதுவரை அறிவிக்கவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க இடைத்தேர்தலுக்கு முன்னதாக ஈரான் மீதான தாக்குதல்களைத் தவிர்த்திருந்த நிலையில், தேர்தல் முடிவடைந்த பின்னர் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிக்கக்கூடும் எனப் பிராந்திய நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

அதேவேளை, அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி