இந்தியா

கச்சத்தீவு விவகாரம் – ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை என மத்திய அரசு திட்டவட்டம்

கச்சத்தீவு மற்றும் கடல்சார் மீன்பிடி உரிமைகள் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது மீண்டும் திறக்கும் எண்ணம் ஏதுமில்லை என்று இந்திய மத்திய அரசு அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு தொடர்பில் 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணை செய்து வரும் நிலையில் மத்திய அரசு இவ்வாறு அறிவித்துள்ளது.

நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்சிதேவா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, இந்திய மீனவர்கள் தொடர்பான கவலைகளை இந்திய அரசு தூதரக ரீதியாகக் கையாண்டு வருவதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவோ ​​அல்லது அதற்கேற்ப செயல்படவோ இலங்கையை இந்தியாவால் கட்டாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

1974-ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதையும், அதைத் தொடர்ந்து 1976-இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டதையும் எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களின் மீதே அட்டர்னி ஜெனரல் இந்த விளக்கங்களை அளித்தார்.

கடல் எல்லை தாண்டிச் செல்லும் இந்திய மீனவர்கள் தொடர்பான தொடர் பிரச்சினை குறித்தும் நீதிமன்றம் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. இந்தியப் பகுதியில் மீன் வளம் குறைந்து வருவதே தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதற்கு முக்கிய காரணம் எனவும் வழக்கறிஞர் இதன்போது எடுத்துக்கூறியுள்ளார்.

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டிச் செல்வதைத் தவிர்க்க மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வழியுறுத்திய அவர், இந்த பிரச்சினைகளுக்கு தமிழக அரசும் முக்கிய காரணம் என சுட்டிக்காட்டினார்.

மேலும்  விசாரணையை தொடர்ந்து  ​​அவ் இரு ஒப்பந்தங்களின் அரசியலமைப்பு அல்லது சட்டப்பூர்வமான செல்லுபடியாகும் தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் எந்தத் தீர்ப்பையும் வழங்கவில்லை. எனவே, அந்த இரண்டு ஒப்பந்தங்களுக்கு எதிரான சவால்கள் நிலுவையிலேயே உள்ளன.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே