கச்சத்தீவு விவகாரம் – ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை என மத்திய அரசு திட்டவட்டம்
கச்சத்தீவு மற்றும் கடல்சார் மீன்பிடி உரிமைகள் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது மீண்டும் திறக்கும் எண்ணம் ஏதுமில்லை என்று இந்திய மத்திய அரசு அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கச்சத்தீவு தொடர்பில் 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணை செய்து வரும் நிலையில் மத்திய அரசு இவ்வாறு அறிவித்துள்ளது. நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்சிதேவா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் ஆஜரான […]



