இலங்கை முக்கிய செய்திகள்

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – 14 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 'டிராக் 6' (TRACK 6) பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிகவெரட்டியாவிலிருந்து அனுராதபுரத்திற்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, வீதியை விட்டு விலகி மரமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று அதிகாலை திரப்பனை – கல்குளம பகுதியின் A09 வீதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த பயணிகளில் 12 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் அனுராதபுரத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திரப்பனைப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்