பொழுதுபோக்கு

விஜய்க்கு சூப்பராக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறியுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், பல பிரபலங்கள் நேற்று இரவு முதலே வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை என்று சொன்னாலும், ரசிகர்களுக்காக இன்னொரு பக்கம் கோட் அப்டேட் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. கோட் ஷாட்ஸ் டிரெண்டாகி வரும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் விஜய் மற்றும் பவதாரிணியின் குரலில் யுவன் இசையில் வெளியாக காத்திருக்கிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்