தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கண்டித்து போராட்டம்; மதுரையில் பாஜக – போலீஸார் இடையே முரண்

உயிர்பலி சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்காத, திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை குண்டுகட்டாக தூக்கி கைது செய்த காவல்துறையினர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 52 பேர் பலியாகி உள்ளனர். திமுக தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையை தடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக கூறி தமிழக அரசை கண்டித்து இன்று பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் பாஜக சார்பில் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், அவர் வருவதற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்ய தொடங்கினர்.

Tamil Nadu's illicit liquor case: BJP announces State-wide protest against  ruling DMK government on June 22 - The Hindu

இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ட்ரக்சரை கொண்டு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர், அவர்களிடம் இருந்து ஸ்ட்ரக்சரை பிடுங்கி சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர், அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் எச் ராஜா வருவதற்கு முன் அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.

அப்போது போராட்ட இடத்திற்கு வந்த எச் ராஜா கள்ளக்குறிச்சியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலை தடுமாற்றம் கொண்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்காத திமுக அரசு, நாங்கள் அமைதியான முறையில் திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் எனக் கூறி முழக்கம் இட தொடங்கினார்.

உடனடியாக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பாஜக எச் ராஜா பேட்டி கொடுத்திருக்கும்போதே அவர் பின்னால் நின்று கொண்டிருந்த பாஜகவினரை காவல்துறையினர் தாக்குவதாக பாஜக கட்சியினர் கூச்சலிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்

You cannot copy content of this page

Skip to content