பொழுதுபோக்கு

“ஜீவா – மீனா” ஜோடி மீண்டும் வாராங்க… எப்படினு தெரியுமா?

விஜய் டிவியில் சக்கைப்போடு போட்ட சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இந்த சீரியலின் முதல் பாகத்தில் ஸ்டாலின், சுஜிதா தனுஷ், விஜே சித்ரா, கதிர், சரவணன் என அந்த சீரியலில் நடித்த அனைவருக்கும் மிகப்பெரிய பெயரும் புகழும் கிடைத்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகம் கடந்த 2023ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில், அந்த சீரியலின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் ஸ்டாலின் தந்தையாகவும், அவரது மனைவியாக நிரோஷாவும் நடித்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகம் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த சீரியலின் இரண்டாம் பாகம் தந்தை மகன்களின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் டிஆர்பி ரேட்டிங்கிலும் படிப்படியாக முன்னேறி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அனைவராலும் கவரப்பட்ட கேரக்டராக வசந்த் வசியின் செந்தில் கதாபாத்திரம் அமைந்திருந்தது. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் வசந்த் வசி கலந்துகொண்டு அசத்தினார்.

இதனிடையே திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து வசந்த் வசி விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி அவருக்கு பதிலாக அந்த சீரியலில் நடிக்க உள்ள நடிகர் பற்றிய அப்டேட்டும் கசிந்துள்ளது.

அதன்படி வசந்த் வசிக்கு பதிலாக நடிகர் வெங்கட், செந்தில் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். வெங்கட் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார்.

இதில் மற்றொரு ஆச்சர்ய தகவல் என்னவென்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் வெங்கட்டுக்கு ஜோடியாக நடித்த ஹேமா தான் தற்போது அதன் இரண்டாம் பாகத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இவர்களது கெமிஸ்ட்ரி முதல் பாகத்திலேயே ஹிட்டடித்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்