பொழுதுபோக்கு

அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகர் ஜனகராஜ் – ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த ஜனகராஜின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

1980களில் தமிழ் சினிமாவில் பெயரும், புகழும் பெற்றவர் தான் ஜனகராஜ். அவரின் டயலாக் டெலிவரிக்கும் சிரிப்புக்கும் என தனி ரசிகர் கூட்டமே உண்டு.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்ல வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு படங்களில் திறம்பட நடித்திருக்கிறார் ஜனகராஜ்.

ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து இவர் நடிக்கும் காமெடி காட்சிகள் வேறலெவல் ஹிட் அடித்தது. ‘தங்கச்சிய நாய் கடிச்சிருச்சு’… ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ போன்ற வசனங்கள் வேறலெவலில் ஹிட் அடித்தன.

டாப் காமெடியனாக ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஜனகராஜ், திடீரென சினிமாவை விட்டே விலகினார். பின்னர் அவர் அமெரிக்காவில் போய் செட்டில் ஆகிவிட்டதாகவும் செய்திகள் உலா வந்தன.

ஆனால் அதெல்லாம் வதந்தி என பேட்டி ஒன்றில் கூறிய ஜனகராஜ், விஜய் சேதுபதியின் 96 படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். தற்போது அவர் நடிப்பில் தாத்தா என்கிற குறும்படம் உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் ஜனகராஜின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த மனுஷன் இப்படி எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிவிட்டாரே என அதிர்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகிறார்கள். அழகும், இளமையும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக ஜனகராஜின் லேட்டஸ்ட் புகைப்படம் அமைந்துள்ளது.

 

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content