இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக இயங்கிய சுரங்கத்தில் விபத்து – 13 பேர் பலி
இந்தோனேசியாவின் போகோரில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 13 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க மீட்புக் குழுவினர் கடுமையாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தங்கச் சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




