உலகம்

அமெரிக்காவில் வேகமாக பரவும் நோரோ வைரஸ் – பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் நோரோ வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவ் மாநிலத்தில் அமைந்துள்ள  L.J. பெல் என்ற தொடக்கப் பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 120இற்கும் மேற்பட்டோருக்கு இந்நோய்  தாக்கம்  கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரிச்மண்ட் மாவட்டப் பாடசாலைகள் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில்  வகுப்புகளைத் தொலைநிலைக் கற்றலுக்கு தற்காலிகமாக மாற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடல் நோய்கள் திடீரென அதிகரித்தமைக்கு  நோரோவைரஸே, காரணம் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நோரோவைரஸ் நெருங்கிய தொடர்பு மற்றும் அசுத்தமான மேற்பரப்புகள் மூலம் வேகமாகப் பரவுகிறது.

மேலும் தற்போது எந்தத் தடுப்பூசிகளோ அல்லது வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகளோ அங்கீகரிக்கப்படவில்லை.

மேலும் வைரஸ் பரவலை தடுக்க குறைந்தது 15 வினாடிகளுக்கு சோப்பு மற்றும் வெந்நீரில் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்