உலகம்

காசா முனையில் இஸ்ரேல் கோரத் தாக்குதல் – 05 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசா முனையில் இஸ்ரேல் இன்று நடத்திய  இரண்டு தனித்தனி தாக்குதல்களில் குறைந்தது ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசா நகரில் உள்ள ‘பாண்டா மால்’ (Panda Mall) அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேரும், நகரின் தெற்குப் பகுதியான ‘துஃபா’ (Tuffah) பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ஒருவரும் கொல்லப்பட்டதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்த இரண்டு தாக்குதல்களும் ஆயுதமேந்திய போராளிகளை இலக்காகக் கொண்டவை என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல் குறித்த கூடுதல் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் அமைப்பு மீண்டும் ஆயுதங்களைச் சேகரிப்பதாகவும் தாக்குதல்களை நடத்துவதாகவும் கூறி, சமீபத்திய வாரங்களில் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்