இலங்கை

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகளை புதிப்பிப்பதற்கான முதலாவது கூட்டம் நடைபெற்றது

ஜனாதிபதிக்கும் மகா சங்கத்தினருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போது எட்டப்பட்ட  முடிவின்படி, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

May be an image of dais and text

இக்குழுவிற்கு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்கார கொள்கை ரீதியான வழிகாட்டல்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

May be an image of one or more people

இந்த கூட்டத்தில்   குழுவின் தலைவரும் பௌத்த சாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளருமான பிரின்ஸ் சேனதீர, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பியுமந்தி பீரிஸ், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் வசந்த அரியரத்ன, பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. சேனரத்ன மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்