பொழுதுபோக்கு

‘சந்திரமுகி 2’ படத்தின் மாஸ் தகவல்.. ரிலீஸ் திகதி கசிந்தது…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமான ‘சந்திரமுகி 2’ படத்தில் இயக்குனர் பி. வாசுவுடன் ராகவா லாரன்ஸ் இணைந்தார்.

வேட்டையன் வேடத்தில் ராகவா லாரன்ஸுடன், சந்திரமுகியின் பாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கின்றார்.

தற்போது, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 17-ம் திகதி மைசூரில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும், 10 முதல் 15 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைகிறது. ஜூன் மாதத்திற்குள் தயாரிப்பு பணிகள் முடிந்துவிடும்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் சந்திரமுகி 2 படத்தைத் தயாரிக்கிறார்.

செப்டம்பர் 15-ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் பிரமாண்டமாக சந்திரமுகி 2 படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன..

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content