நோபல் பரிசால் வந்த விரோதம் – ICC நீதிமன்றம் மீது தடை விதித்தது அமெரிக்கா
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாகம் ICC நீதிமன்றத்தின் மீது தடைகளை விதித்துள்ளது.
இது வொஷிங்டனுக்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர ரீதியிலான மோதல் சூழலை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையை தொடர்ந்து நீதிமன்றத்தை பாதுகாக்க 125 நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நீதிமன்றம் தனித்துச் செயல்பட முடியாது. இதன் எதிர்காலம் இப்போது அதை உருவாக்கிய நாடுகளின் கைகளில்தான் உள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றை விசாரிப்பதற்காக 2002-ல் நிறுவப்பட்ட இந்த நீதிமன்றத்தின் மீது ட்ரம்ப் நிர்வாகம் நீண்டகாலமாகவே விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.
மேலும், இதற்கு முன்பே அதன் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மீது தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




