ரஷ்யா மீதான தடைகளை தளர்த்தும் அமெரிக்காவின் முடிவு -ஜெர்மனி எடுத்துள்ள தீர்மானம்
எரிபொருள் கொள்வனவு நிமித்தமாக ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக தளர்த்தியுள்ளபோதிலும் குறித்த தடைகளை தொடரப்போவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜெர்மனியின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் கார்னேலியஸ் Stefan Kornelius வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஷ்ய டீசல் விநியோகம் தொடர்பான அமெரிக்காவின் முடிவை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று கூறிய அவர், “ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் குறித்த முடிவுகளில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும், கூடுதல் தடைகளை விதிப்பது குறித்து நட்பு நாடுகளுடன் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் உக்ரைனுக்கான ஜெர்மனியின் ஆதரவு மாறவில்லை என்றும், தீர்வு காண்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடரும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலையைக் குறைக்கும் முயற்சியாக, உலக சந்தைகளுக்கு டீசல் விநியோகம் செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் நேற்று (09.10) அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய எரிபொருள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியதுடன் ஒப்பந்தம் ஒன்றையும் எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




