இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – 14 பேர் வைத்தியசாலையில்
நிகவெரட்டியாவிலிருந்து அனுராதபுரத்திற்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, வீதியை விட்டு விலகி மரமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை திரப்பனை – கல்குளம பகுதியின் A09 வீதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த பயணிகளில் 12 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் அனுராதபுரத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திரப்பனைப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து […]



