பாலஸ்தீன ஆக்சன் (Palestine Action) அமைப்புமீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அதன் இணை நிறுவனரான ஹுதா அம்மோரிக்கு (Huda Ammori) பிரித்தானியா உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன ஆக்சன் அமைப்பு தடை: மேல்முறையீடு செய்ய பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அனுமதி

  • July 30, 2026
  • 0 Comments

பாலஸ்தீன ஆக்சன் (Palestine Action) அமைப்புமீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அதன் இணை நிறுவனரான ஹுதா அம்மோரிக்கு (Huda Ammori) பிரித்தானியா உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நேரடிப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இந்த அமைப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தடையை நீக்கக் கோரி அமைப்பின் இணை நிறுவனரான ஹுதா அம்மோரி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த பெப்ரவரி மாதம், இந்தத் தடை […]

உலகம் செய்தி

ஈரானுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணை? சீனா மறுப்பு

  • July 30, 2026
  • 0 Comments

சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் வைத்து இயக்கும் 400 வான் பாதுகாப்பு ஏவுகணை செலுத்தும் கருவிகள் (Air-defence missile launchers) சில வாரங்களுக்குள் ஈரானுக்கு கிடைக்கவுள்ளதாக Reuters செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை சீனா முற்றாக மறுத்துள்ளது. சீனாவிலிருந்து ஈரான் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெறவுள்ளதாகப் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி Reuters செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையின்படி, முதற்கட்ட விநியோகங்கள் மேற்கு சீனாவில் உள்ள உரும்கியிலிருந்து (Urumqi) பாகிஸ்தான் வழியாக ஈரானைச் சென்றடையும் […]

உலகம் முக்கிய செய்திகள்

புண்டிபுக்யோ திரிபுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி தன்னார்வலருக்கு செலுத்தப்பட்டது

  • July 30, 2026
  • 0 Comments

எபோலாவின் புண்டிபுக்யோ திரிபுக்கு எதிரான முதலாவது தடுப்பூசி பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக் குழு, தன்னார்வலர் ஒருவருக்கு இந்த தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசியின் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ChAdOx1 BDBV என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ( Serum Institute of India), குறைந்த நேரத்தில் 620,000 டோஸ் தடுப்பூசிகளைத் தயாரித்து, பரிசோதனைக்காக 4,000 சோதனை டோஸ்களை வழங்கியுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசில் புண்டிபுக்யோ […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஜெர்மனியில் வெப்பத்தினால் 9,800 பேர் உயிரிழப்பு – மீண்டும் தாக்கும் வெப்ப அலை

  • July 30, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் RKI சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட முதியவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெர்மனியில் வெப்பநிலையானது சுமார் 20 டிகிரி செல்சியஸை விட அதிகரித்ததே மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே , வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் எல்லையைத் தாண்டக்கூடும் என்பதால், […]

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் பிரதிநிதிகள், கட்டார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையிலேயே, இந்த குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் செய்தி

காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட நால்வர் பலி

  • July 30, 2026
  • 0 Comments

போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் பிரதிநிதிகள், கட்டார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையிலேயே, இந்த குண்டுவீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டதுடன், பல டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸா சுகாதார அமைச்சு வியாழக்கிழமையன்று வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் காஸா பகுதி முழுவதிலும் […]

உலகம்

பாகிஸ்தானில் பொலிஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சமர் – 11 அதிகாரிகள் உயிரிழப்பு

  • July 30, 2026
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் இரவோடு இரவாக நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பொலிஸ் நிலையத்தை கனரக ஆயுதங்களால் தாக்கியுள்ளதுடன்,  அங்கு வந்துகொண்டிருந்த கூடுதல் படையினரை பதுங்கியிருந்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகள் ஒரு மணி நேரம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வெப்ப அலை காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு

  • July 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் இந்த கோடைக் காலத்தில் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. சமீபத்திய வெப்ப அலைக் காரணமாக 2,877 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக  மே மாதத்தில் 753 இறப்புகளும், ஜூன் மாதத்தில்  2,124 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள், கடந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான முழு கோடை காலத்திற்கும் பதிவான எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரிப்பாகும். இதேவேளை இந்த வருடத்தில் […]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைபுகுநர் எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி கட்சியின் உறுப்பினரான சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீதான கட்டளையை அடுத்த மாதம் இறுதிக்கு - ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு - திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இலங்கை செய்தி

தமிழரசுக் கட்சியின் வழக்கு ஒத்திவைப்பு

  • July 30, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இடைபுகுநர் எதிராளியாகத் தம்மைச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி கட்சியின் உறுப்பினரான சுப்பிரமணியம் பரமானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவின் மீதான கட்டளையை அடுத்த மாதம் இறுதிக்கு – ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு – திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இன்று இந்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி இடைபுகுநர் எதிராளிக்கான விண்ணப்பம் தொடர்பாக வழக்காளி மற்றும் ஏனைய எதிராளிகளின் எழுத்துமூல சமர்ப்பணங்கள் […]

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணைகோரி அறவழிப் போராட்டம்

  • July 30, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரினின் ஒழுங்கமைப்பில், அரியாலை புனித யூதா ததேயு திருச்சொரூபம் முன்பாக ஆரம்பமான இந்தப் பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது. பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ள அவசர வேண்டுகோள் […]

ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயை கடக்க புதிய யுக்தியை கையாளும் புலம்பெயர்ந்தோர் – மூவர் பலி

  • July 30, 2026
  • 0 Comments

பிரான்சில் இருந்து ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சின் டன்கிர்க் (Dunkirk) துறைமுகத்திற்கு  அருகே அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் இன்றைய தினம் சடலங்களை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சீரான வானிலை காரணமாக நேற்றைய தினம் சுமார் 700 பேர் ஆங்கிலக் கால்வாயை கடந்திருக்கலாம் என அதிகாரிகள் யூகிக்கின்றனர். புலம்பெயர்ந்தோர் சிறுபடகுகளில் ஏறுவதை பிரெஞ்சு காவல்துறையினர் கண்காணிப்பது காணொளியில் பதிவாகியுள்ளது, ஆனால் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், படகுகள் தண்ணீரில் […]