இந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான அஜின்கியா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை (30) தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் அறிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரம்

  • July 30, 2026
  • 0 Comments

இந்தியக் கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான அஜின்கியா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை (30) தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 T20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே, கடைசியாக ஜூலை 2023 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ரஹானேவின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று, 2020-21 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் […]

காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்துவரும் நிலையில், இந்தியா இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை (Amnesty International) சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் இந்தியா: சர்வதேச மன்னிப்புச்சபை குற்றச்சாட்டு

  • July 30, 2026
  • 0 Comments

காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்துவரும் நிலையில், இந்தியா இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபை (Amnesty International) சுட்டிக்காட்டியுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இந்த மனித உரிமைகள் அமைப்பு, இந்தியா “இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையுடன் எவ்வாறு நெருக்கமான மற்றும் லாபகரமான கூட்டாண்மையை உருவாக்கியுள்ளது என்பதையும், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் விநியோகச் சங்கிலிகளில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக மாறியுள்ளது என்பதையும்” ஆவணப்படுத்தியுள்ளது. “2023 அக்டோபர் 7 முதல் இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு […]

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி கிறிசி ஹளலகன் (Chrissy Houlahan) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

அமெரிக்க ராஜதந்திரிகள் குழு சஜித்துடன் சந்திப்பு

  • July 30, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி கிறிசி ஹளலகன் (Chrissy Houlahan) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது பொருளாதார ஒத்துழைப்பு, ஆளுகை, கல்வி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை என்பன குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கும் , ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் […]

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் இரவில் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வாஷிங்டன் ஈரானை "கடுமையாகத் தாக்கி நசுக்கப் போகிறது" என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பா

பிரித்தானியாவில் 700 ஆண்டுகளுக்கு தேவையான எண்ணெய் கையிருப்பு உள்ளது – அகழ ஒப்புதல்

  • July 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் வடகடல் பகுதிகளில் எண்ணெய் அகழ்ந்தெடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள புதிய பிரதமர்  ஆண்டி பர்னம் அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையானது பிரித்தானியாவை உலக நாடுகளில் செல்வந்த நாடாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களின் முன்னிலையில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் வடகடலில் 700 ஆண்டுகளுக்கு தேவையான எண்ணெய் இருப்பு உள்ளதாகவும் கூறினார். இங்கிலாந்திடம் கணிசமான வளங்கள் இருந்தபோதிலும், அது காற்றாலைகளைச் […]

அசாம் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா செய்தி

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு

  • July 30, 2026
  • 0 Comments

அசாம் மாநிலத்தில் ஏழு மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது. அசாமில் வெள்ளத்தில் சிக்கி சிவசாகர் மாவட்டத்தில் இருவர் மற்றும் கோலாகாட்டில் ஒருவர் என நேற்று மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 78-ஐ எட்டியுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) தெரிவித்துள்ளது. அரசு அறிக்கையின்படி, சிவசாகர், சாரைடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நாகான், பிஸ்வநாத் மற்றும் காம்ரூப் ஆகிய ஏழு […]

இலங்கை

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினத்தில் உலக நாடுகளுடன் கைக்கோர்த்த இலங்கை

  • July 30, 2026
  • 0 Comments

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை அனுசரிப்பதில் இலங்கையும் உலக நாடுகளுடன் இணைந்துள்ளது. ஆட்கடத்தலின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், வலுவான பொது விழிப்புணர்வு மற்றும் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பில் , பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளரும், தேசிய ஆட்கடத்தல் தடுப்புப் பணிப்படையின் தலைவருமான ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (Sampath Thuyacontha) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆட்கடத்தல் என்பது எல்லைகளைக் கடந்து, சமூகங்களுக்குள், பணியிடங்கள், இணையதளங்கள் வழியாக, மற்றும் முறையான வேலை வாய்ப்புகள் […]

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தலை துண்டிப்பு வீடியோக்கள் உட்பட தனது தளத்தில் உள்ள பயங்கரவாத உள்ளடக்கங்களை நீக்கத் தவறியதாகக் கூறி, டெலிகிராம் (Telegram) செயலிக்கு எதிராக ஆஸ்திரேலியா , கூட்டாட்சி நீதிமன்றத்தில் (Federal Court) வழக்கு தொடரவுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பயங்கரவாத வீடியோக்கள்: டெலிகிராமிற்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றில் வழக்கு

  • July 30, 2026
  • 0 Comments

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தலை துண்டிப்பு வீடியோக்கள் உட்பட தனது தளத்தில் உள்ள பயங்கரவாத உள்ளடக்கங்களை நீக்கத் தவறியதாகக் கூறி, டெலிகிராம் (Telegram) செயலிக்கு எதிராக ஆஸ்திரேலியா , கூட்டாட்சி நீதிமன்றத்தில் (Federal Court) வழக்கு தொடரவுள்ளது. டெலிகிராமில் உள்ள பயங்கரவாத உள்ளடக்கங்கள் குறித்து ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு ஆணையர் (eSafety Commissioner) ஜூலி இன்மான் கிராண்ட் வியாழக்கிழமை இந்த சட்ட நடவடிக்கையை அறிவித்தார். இதன் மூலம் டெலிகிராம் நிறுவனம் […]

இலங்கை

இனி மோட்டார் சைக்கில்களிலும் சுவசெரிய சேவை

  • July 30, 2026
  • 0 Comments

1990 சுவா செரிய அறக்கட்டளை, தற்போது மோட்டார் சைக்கிள் மூலமும் தனது சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு விரைவான மருத்துவ உதவியை வழங்கும் நோக்கிலும், அவசர மருத்துவ வசதியை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த திட்டம் அறிமுக்கப்படுத்தப்படவுள்ளது. அறக்கட்டளையின்படி, இந்த புதிய சேவையானது, குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைத் தடைகள் காரணமாக ஆம்புலன்ஸ் சேவைகள் தாமதமாகும் பகுதிகளில், இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அவசர மருத்துவ உதவிக்கான அணுகலை மேம்படுத்தவும், விரைவான பதிலளிப்பு நேரத்தை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

இங்கிலாந்தை ஆட்டி படைக்கும் வறட்சி : சுற்றுச்சூழல் முகமை அறிவிப்பு

  • July 30, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் குறிப்பிட்ட 07 பகுதிகள் அதிகாரப்பூர்வமாக  வறட்சியான பகுதிகளாக சுற்றுச்சூழல் முகமையால்  அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஈஸ்ட் ஆங்லியா, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் மற்றும்  லண்டன் தேம்ஸ் பள்ளத்தாக்கு, ஹாம்ப்ஷையர் மற்றும் ஐல் ஆஃப் வைட், டெவோன் மற்றும் கார்ன்வால், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், மற்றும் வெசெக்ஸ்  ஆகிய இடங்களே வரட்சியான பகுதிகளாக  அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரமான குளிர்காலம் இருந்தபோதிலும், இங்கிலாந்தில் எதிர்பார்க்கப்பட்ட மழையில் 7 சதவீதம்  மட்டுமே பெய்யும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு வறண்ட மாதமாக […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடரும்வரை ஓயமாட்டோம்: ஈரான் எச்சரிக்கை

  • July 30, 2026
  • 0 Comments

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC), ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அங்குள்ள ஒரு விமானப்படை தளம் மற்றும் கட்டளை மையம் (command centre) ஆகியவற்றைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் தொடரும் வரை, ஈரானிய தரப்பின் எதிர்ப்பும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றும், தெஹ்ரானுக்கு எதிரான அச்சுறுத்தல் நிறைந்த பேச்சை அமெரிக்க அதிகாரிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஈரானிய தரப்பால் அங்கீகரிக்கப்படாத […]