உலகம்

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து – 13 பேர் பலி

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று நேற்று விபத்தில் சிக்கியுள்ளது.

இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செஸ்னா கேரவன் சி-208 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம் நாஸ்கா லைன்ஸ் தொல்பொருள் தளத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

அதில் 11 பயணிகளும் 02 பணியாளர்களும் இருந்த நிலையில் அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளில் இரண்டு ஜெர்மனியர்கள், இரண்டு ஸ்பானியர்கள் மற்றும் ஏழு இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக பெருவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விசாரணைகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்