இலங்கை

இலங்கை முழுவதும் 14 ஆயிரம் மின்தடை சம்பவங்கள் பதிவு – காஞ்சன விஜேசேகர!

  • July 6, 2023
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 14 ஆயிரம் மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (ஜுலை 06) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா,  கண்டி மாவட்டங்களிலும்,  நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளிலும் அதிகளவான மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

  • July 6, 2023
  • 0 Comments

இலங்கையில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, இன்று கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 148,000 ரூபாவாக குறைந்துள்ளது. நேற்றைய தினம் இதன் விலை 149,000 ரூபாவாக காண்பட்டது. இதேவேளை, 161,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்க பவுனின் விலை இன்றைய தினம் 160,000 ரூபாவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் இதனை தெரிவிக்கின்றன.

பொழுதுபோக்கு

அதிகாலையில் வௌியானது Salaar Teaser.. அப்படியே கே.ஜி.எப் மாதியே இருக்கு….

  • July 6, 2023
  • 0 Comments

கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. கே.ஜி.எப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்துள்ளது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். அதேபோல் மலையாள நடிகர் பிருத்விராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். பாகுபலிக்கு பின் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நடிகர் பிரபாஸ், சலார் படத்தை மலைபோல் நம்பி உள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 28-ந் தேதி திரைக்கு […]

ஐரோப்பா

லாட்வியாவிற்று 305 மில்லியன் யூரோக்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

  • July 6, 2023
  • 0 Comments

லாட்வியாவில் போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்த  ஐரோப்பிய ஆணையம்  305 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளது. 2021-2027 நிதிக் காலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறித்த நிதியானது  குறிப்பிடத்தக்க முயற்சிகளை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நிதியுதவி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய திட்டங்களில் ஒன்று, ரயில் பால்டிகா திட்டம். இது லாட்வியாவில் இணைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து துறையை மேம்படுத்தவும் நோக்கமாக கொண்டுள்ளது. இதற்காக 298 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன்  கீழ் லீபாஜா துறைமுகத்தை (Liepaja Sea […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞனை நாடு கடத்த நடவடிக்கை – தாய் விடுத்த கோரிக்கை

  • July 6, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸிடம் தமிழ்த் தாய் ஒருவர் கோரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதில் தமது மகன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு, அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ரீட்டா அருள் ரூபன் எனப்படும் குறித்த பெண் இலங்கையிலிருந்து 2012 ஆம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று தற்காலிக பாதுகாப்பு விசாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வசித்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டது. இதனையடுத்து, அவர் தமது மகனை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 200 ஆண்டுகள் பழைமையான தேவாலயம் மீண்டும் மக்களின் பார்வைக்கு

  • July 6, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் வர்த்தகக் கட்டடம் ஒன்றால் மறைக்கப்பட்டிருந்த தேவாலயத்தை முதல் முறையாக பாரக்க முடிந்துள்ளது. 200 ஆண்டுப் பழைமையான தேவாலயத்தை சுமார் 50 ஆண்டுகளில் முதல்முறையாக வீதியில் காண முடிந்துள்ளது. House of Fraser என்ற அந்தக் கட்டடம் 1867ஆம் ஆண்டு Howells என்ற பெயரில் கார்டிஃப் நகரில் திறக்கப்பட்டது. 4 ஆண்டுகள் கழித்து அந்தக் கட்டடம் விரிவடைந்து Bethany Baptist தேவாலயத்தை மறைத்து விட்டது. கார்டிஃப் நகரில் அதிகரித்த மக்கள்தொகையாலும் கட்டடங்களாலும் அந்தத் தேவாலயத்திற்குச் செல்வது கடினமாக […]

ஐரோப்பா

பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை : பிரித்தானியா முழுவதும் 20 துப்பாக்கிகள் உள்பட மில்லியன் கணக்கில் போதைப்பொருள் மீட்பு!

  • July 6, 2023
  • 0 Comments

பிரித்தானியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், £130 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா, ஒரு மில்லியன் மதிப்புள்ள கொக்கோய்ன், மற்றும் 20 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை பிரித்தானிய சட்ட அமலாக்கத் துறை வரலாற்றில் மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் மேற்கொள்ளப்பட் சோதனை நடவடிக்கையின்போது, 20 துப்பாக்கிகள், £1 மில்லியன் மதிப்புள்ள கொக்கோய்ன் போதைப்பொருள், 6 இலட்சத்து 36 ஆயிரம் பவுண்ட் ரொக்கம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஆபரேஷன் மில்லே என்று […]

பொழுதுபோக்கு

தந்தை விஜயகுமார் அத்துமீறுவதாக நடிகை பரபரப்பு புகார்

  • July 6, 2023
  • 0 Comments

கேரளாவைச் சேர்ந்த நடிகை அர்த்தனா பினு தன்னுடைய தந்தை விஜயகுமார் அத்துமீறி வீட்டின் நுழைந்து மிரட்டுவதாக கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்த்தனா பினு மாஸ் கம்யூனிகேஷன் படிக்கும் போதே, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார். பின்னர் மாடலிங் செய்ய துவங்கினார். இதைத் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்த நிலையில். தெலுங்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு ‘சீதா மகாலட்சுமி’ என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதே ஆண்டு மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் […]

உலகம்

மக்கள் ஜோம்பிஸ் போல் தெரிந்தார்கள் : துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் வாக்குமூலம்!

  • July 6, 2023
  • 0 Comments

டென்மார்க்கில் கடந்த ஆண்டு ஒரு வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபரை தடுப்பு காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவத்தை மேற்கொண்ட 23 வயதான இளைஞர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜோம்பிஸ் போல் தெரிந்ததாகவும், அதனாலேயே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து அவரை பாதுகாப்பான மருத்துவ வசதியின் கீழ் தடுப்புகாவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோபன்ஹேகனின் புறநகர்ப் பகுதியில் உள்ள மிகப்பெரிய ஃபீல்ட் […]

வட அமெரிக்கா

கனடாவில் கடும் வெப்பம்! நெருக்கடியில் மக்கள்

  • July 6, 2023
  • 0 Comments

கனடாவின் ரொரன்டோ மற்றும் ஹாமில்டன் ஆகிய பகுதிகளில் அதிகளவில் வெப்பநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், ஒட்டாவா மற்றும் ஒன்றாரியோ உள்ளிட்ட இடங்களிலும் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு கூடுதல் வெப்பநிலையை எதிர்பார்க்க முடியும் என கனடா சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெப்பநிலையானது 20 முதல் 35 பாகை செல்சியஸ் வரையில் உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படும் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.