அறிவியல் & தொழில்நுட்பம்

Google அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம்

  • July 18, 2023
  • 0 Comments

கூகுளின் புதிய காப்புரிமைக் கொள்கையில், Connected Flight Mode என்ற அம்சம் எல்லா ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் விரைவில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தால் ஒரு நபர் விமானத்தில் பயணிக்கும்போது தானாகவே ஆண்ட்ராய்டு சாதனம் ஃபிளைட் மோடில் இருக்கும்படி மாற்றிவிடும். கூகுளின் சமீபத்திய அறிக்கையின்படி எல்லா ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் விரைவில் Connected Flight Mode என்ற புதிய அம்சம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் புதிய காப்புரிமைக் கொள்கையின் படி கனெக்டட் ஃபிளைட் மோட் அம்சம், ஒருவர் […]

இலங்கை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 64 மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கம்!

  • July 18, 2023
  • 0 Comments

தரமற்றவை என கண்டறியப்பட்ட 64 மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சால் விசேட சுற்று நிரூபம் ஒன்று நேற்று (18.07) வௌியிடப்பட்டது. அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவுகளிலும், ரத்த அழுத்த நிலையைப் பராமரிக்கவும் பயன்படுத்தப்படும்,   தரம் குறைவாக இருப்பதாக சந்தேகிக்கப்படும் Imaepasabe  என்ற மருந்தை  உடனடியாக பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதயத் துடிப்பு குறையும் மற்றும் இரத்த அழுத்தம் குறையும் போது இந்த மருந்து அடிக்கடி […]

ஆஸ்திரேலியா முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் மர்மமான முறையில் மரணிக்கும் குதிரைகள் – அதிர்ச்சியில் அதிகாரிகள்

  • July 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் – விக்டோரியா மாகாணத்தின் பல பகுதிகளில் 02 வாரங்களுக்குள் 10 குதிரைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அரச சுகாதார திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளன. மார்னிங்டன் தீபகற்பத்தில் – தென்கிழக்கு மெல்போர்ன் மற்றும் தென்மேற்கு மெல்போர்ன் ஆகிய இடங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன. இந்த சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏதேனும் உடல் நிலை காரணமாக மரணங்கள் இடம்பெற்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். விக்டோரியாவில் குதிரைப் பந்தயத்திற்கான நிர்வாகக் குழுவான ரேசிங் விக்டோரியா, இந்த […]

இலங்கை

மின்சாரம், பெட்ரோலியம் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

  • July 18, 2023
  • 0 Comments

பல பொது சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். இதன்படி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, மின்சாரம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் […]

ஐரோப்பா

ஐபோன் பயன்படுத்த தடை – புட்டின் விடுத்த அதிரடி உத்தரவு

  • July 18, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் பணியாற்றும் அரசாங்க ஊழியர்கள் ஐபோன்கள் பயன்படுத்த ரஷ்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் உளவு பார்பததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களாகவே இது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி புட்டின், ரஷ்ய அரசாங்கத்தை ஐபோன்கள் பயன்படுத்த தடைவிதிக்க நடவடிக்கை எடுத்தார். அரசுப்பணியில் இருக்கும் ஊழியர்கள் அலுவலக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் போது ஐபோன் உள்ளிட்ட ஆப்பிளின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபோனில் இருந்து அலுவலக சம்மந்தப்பட்ட மின்னஞ்சலைத் […]

உலகம்

அமெரிக்கா – ஐரோப்பாவை உலுக்கும் வெப்பம் – கடும் நெருக்கடியில் மக்கள்

  • July 18, 2023
  • 0 Comments

அமெரிக்கா – ஐரோப்பாசில பகுதிகளில் தகிக்கும் வெப்பம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கலிபோர்னியா முதல் டெக்சஸ் வரை நிலவிவரும் கடும் வெப்பம் இந்த வாரயிறுதியில் உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிசோனா மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோரு நாளும் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மக்கள் போராடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பீனிக்ஸில் தொடர்ந்து 16ஆவது நாளாக வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸுக்கும் மேல் பதிவானது. இந்த நிலையில் ஐரோப்பாவின் சில பகுதிகளையும் வெப்பம் வாட்டுகிறது. இத்தாலியில் இந்த […]

இலங்கை

மொட்டு இருக்கும் வரை பாசிசத்திற்கு இடமில்லை – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

  • July 18, 2023
  • 0 Comments

ஜே.வி.பியின் போராட்டத்தின்புாது அதில் கலந்து கொண்ட அனைவரின் கணக்குகளிலும் பணம் வரவு வைக்கப்பட்ட விதம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார். ஜே.வி.பியின்  மூளையாகச் செயற்படுபவர்களின் மரபணுக்களில் கோபம், வெறுப்பு, பொறாமை, தீவைப்பு, கொலை போன்ற கலாசாரம் மட்டுமே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், போராட்டத்தில் இருந்து கோடீஸ்வரர்களாக மாறிய இவர்கள், […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சமூக உதவி தொகையில் மேலும் 100 யூரோ?

  • July 18, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சமூக உதவி தொகை மீண்டும் 100 யூரோ அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் சமூக உதவி பணங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் பல நலன்களை பெற்று வருகின்றனர். ஜெர்மனியில் சமூக உதவி பணமானது தற்பொழுது பேர்க கலட் என்ற பெயருடன் தனி நபருக்கு 502 யூரோ வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளையில் பல சமூக நல அமைப்புக்கள் இந்த மாதாந்த கொடுப்பனவை 725 யூரோவாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளது. […]

இலங்கை

தபால் சேவையை டிஜிக்டல் மயமாக்க திட்டம்!

  • July 18, 2023
  • 0 Comments

தபால் சேவையின் நவீனமயப்படுத்தலின் கீழ் நாடு பூராகவும் 1,000 முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக,  வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார  தெரிவித்துள்ளார். நாட்டில் வலுவான தபால் சேவையை உருவாக்கும் இறுதி இலக்குடன் தபால்காரர்களுக்கு உத்தியோகபூர்வ சீருடையும் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தபால் சேவையை நவீனமயமாக்கும் பணியை அரசு மற்றும் தனியார் துறை இணைந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர்,  தபால் துறையை எந்த வகையிலும் தனியார் […]

ஐரோப்பா

பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய தீ விபத்து – இருவர் பலி – பலர் காயம்

  • July 18, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இடம்பெற்ற தீவிபத்து சம்பவம் ஒன்றில் இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் கடற்கரை நகரமான Lens (Pas-de-Calais) இல் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் பரவிய தீயினை அடுத்து, தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். வீட்டுக்குள் ஒன்பது பேர் சிக்கியிருந்த நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். அதன்முடிவில் ஒரு ஆண் மற்றும் […]