இலங்கை

மின்சாரம், பெட்ரோலியம் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

பல பொது சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

இதன்படி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மின்சாரம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்