இந்தியா செய்தி

BRICS மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

இந்தியாவில் நடைபெறவுள்ள 18வது BRICS பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் வருகை தரவுள்ளதை ஈரான் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த விஜயத்தின் போது, BRICS மாநாட்டில் பங்கேற்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளார்.

இச்சந்திப்பில் இந்தியா – ஈரான் இடையிலான உறவை வலுப்படுத்துதல், சபாஹார் (Chabahar) துறைமுக திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் சூழல்கள் குறித்து முக்கியமாகக் கவனஞ்செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) பணியாற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்தும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்படவுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் தொலைபேசி வாயிலாக உரையாடியபோது, செப்டம்பர் 12-13 திகதிகளில் இந்தியா நடத்தும் BRICS தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி ஈரான் ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்திருந்தார்.

அதற்கு முன்னர் 2024 அக்டோபரில் ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற BRICS மாநாட்டின் போதே இவ்விரு தலைவர்களும் முதன்முதலில் நேரில் சந்தித்திருந்தனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி