இலங்கை செய்தி

3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் அகற்றம்: திருகோணமலை வைத்தியசாலை வைத்தியர்கள் உலக சாதனை

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடைய நபர் ஒருவரின் உடலிலிருந்து, மிக நீளமும் அதிக எடையும் கொண்ட சிறுநீரகக் கல்லைச் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் (Pragalathan Balakrishnan) தலைமையில் இன்று (14) வெள்ளிக்கிழமை இச்சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, கடந்த 2003ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் 1.9 கிலோகிராம் எடையுள்ள சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதே இதுவரை உலக சாதனையாகக் கருதப்பட்டது.

எனினும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட இச்சத்திர சிகிச்சையின் போது, 3.100 கிலோகிராம் (3 கிலோ 100 கிராம்) எடையுள்ள மிகப்பெரிய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபருக்கே இச்சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இச்சத்திர சிகிச்சையில், வைத்தியர்களான எம்.எம். ரிஷ்லி, ஜே.எம். இஹ்ஸான், சீ. பிரகலாதன் மற்றும் மயக்க மருந்து வைத்திய நிபுணர் அமில ஜெயக்கடு உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

(அப்துல்சலாம் யாசீம்)

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை