நிலநடுக்கம் – கொலம்பியாவிற்கு உலக வங்கி நிதியுதவி
கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அவசரக்கால நடவடிக்கைக்காக 200 மில்லியன் டொலர்களை வழங்கியதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
கொலம்பிய அரசாங்கத்திற்கு சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீட்டை வழங்குவதற்காக, ‘நிலநடுக்கங்களால் ஏற்படும் சேதங்களின் உலகளாவிய விரைவான மதிப்பீடு’ (GRADE) என்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளதாக அந்த வங்கி கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் வணிகங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இதில் பொது சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவும் அடங்கும் என்றும் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




