இலங்கை விளையாட்டு

SLvsPAK Test – இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 221/5

  • July 17, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ஓட்டங்களை பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் ஆடிய அந்த சகல விக்கட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சாா்பில் அதிகபட்சமாக Dhananjaya de Silva 122 ஓட்டங்களையும் Angelo Mathews 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சாா்பில் Shaheen Shah Afridi, Naseem […]

இலங்கை

கோட்டாவின் வழியை பின்பற்றும் ரணில்! சகல முஸ்லிம்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள இம்ரான் மகரூப்

”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் புறக்கணித்து வருகின்றார்” என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”இலங்கையில் கிழக்கு மகாணத்தில் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றனர். இந்நிலையில் கோட்டாபய ராக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆளுநர் இம்மாகாண முஸ்லிம்களை பல்வேறு வகையிலும் புறக்கணித்து வந்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ள அதிகாரசபைகள், ஆணைக்குழுக்கள் என்பவற்றுக்கான தவிசாளர் மற்றும் பொதுமுகாமையாளர்கள் […]

பொழுதுபோக்கு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் ரஜினி சமீபத்தில் தனது காட்சிகளை நிறைவு செய்தார். இதையடுத்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பீடேஷ்வர் 171 படத்தின் பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. ஏற்கனவே வெளியான தகவலின்படி தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதன்படி லோகேஷ் கனகராஜ் தனது நண்பரும் […]

புகைப்பட தொகுப்பு

கேப்டன் விஜயகாந்த்தின் மகன் நடிக்கும் புதிய ஆக்சன் திரைப்படம்… பூஜையுடன் இனிதே துவங்கியது

  • July 17, 2023
  • 0 Comments

Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்” மற்றும் “ரேக்ளா” பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே […]

இலங்கை

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு! கலால் திணைக்களம் வெளியிட்ட தகவல்

இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 20,121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 2,687 பெண்களும் உள்ளடங்குவதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 57 கலால் நிலையங்கள் மற்றும் 5 கலால் விஷேட நடவடிக்கை பிரிவுகள் மற்றும் கலால் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் மூலம் குறித்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை

பிரதமர் மோடிக்கான மகஜர் இந்திய துணைதூதரகத்தில் இன்று கையளிப்பு

  • July 17, 2023
  • 0 Comments

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடம் 13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி வட கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான மகஜர் ஒன்றினை யாழ் இந்திய துணைதூதுவரகத்தில் இன்றைய தினம் கையளித்தனர் மகஜர் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வாழ்நாள் பேராசிரியர் பொ, பாலசுந்தரம் பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்தார்,13வது திருத்த சட்டம் குறித்து அதனால் வந்த மாகாண சபை கட்டமைப்பினை முழுமையாக அமுல் […]

ஐரோப்பா

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகும் ரஷ்யா

  • July 17, 2023
  • 0 Comments

உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்கத்துடன் ‘கருங்கடல் தானிய ஒப்பந்தம்’எற்படுத்தப்பட்டது. தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடு உக்ரைன். உலகின் பல நாடுகள் உக்ரைனின் தானியங்களை பெரிதும் நம்பியிருக்கின்றன. ரஷ்ய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய ஏற்றுமதி குறைந்து மிக பெரிய உணவு நெருக்கடி உருவாகியது. இதனால் கடந்த வருடம் ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கியின் முயற்சியால் ரஷ்யா-உக்ரைன் மோதலால் தேக்கி வைக்கப்பட்ட உக்ரேனிய தானியங்களை பாதுகாப்பாக ஏற்றுமதி […]

விளையாட்டு

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டி! வவுனியா மாணவிக்கு கிடைத்த கௌரவம்

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ள மாணவியையும் , பயிற்றுவிப்பாளரையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. பத்தினியார் மகிழங்குளம், சமயபுரம் மாணவியின் முயற்சியையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு அவரைப் பாராட்டும் விதமாக பளுதூக்கல் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றிருந்தது. 2023ம் ஆண்டிற்கான அகில உலக பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையின் வடமாகாணம் வவுனியாவிலிருந்து 40கிலோ எடை பிரிவில் 16 வயதையொட்டிய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா […]

பொழுதுபோக்கு

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இலியானா! இவர்தான் காரணமா? அவரே வெளியிட்ட புகைப்படம்

கர்ப்பிணி நடிகை இலியானா சமீபத்தில் தனது காதலனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தமிழில் ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா, தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் பிரபலமான நடிகை. சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குழந்தையின் தந்தை யார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. கர்ப்பிணி இலியானாவுக்கு இணையதளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அவர் தனது பெரிய வயிற்றின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். சமீபத்தில், இலியானா தனது இன்ஸ்டாகிராம் […]

ஆசியா

பிரபல ஆப்கான் பாடகி பாகிஸ்தானில் மர்மநபர்களால் சுட்டுக்கொலை!

  • July 17, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் பிரபல பாடகி ஹசிபா நூரி (38).நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசாவில் ஒரு நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் இருந்து தப்பி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து இருந்தார். நூரியின் நண்பரான கோஸ்போ அஹ்மதி, அவர் இறந்த செய்தியை ஒரு சமூக ஊடக இடுகையில் உறுதிப்படுத்தி உள்ளார். ஹசிபா நூரியின் மரணம் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் எதிர்கொள்ளும் கடுமையான ஆபத்தை உணர்த்துகிறது. சுமார் […]