ஐரோப்பா

ரஷ்ய தலைவரை சந்திக்கும் வடகொரிய தலைவர்!

  • September 5, 2023
  • 0 Comments

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உத்தியோகபூர்வ பயணமாக ரஷ்யா செல்லவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்களை வடகொரியாவிடம் இருந்து பெற முடியுமா என்பது குறித்து இதன்போது விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணம் அடுத்தமாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.  இதற்காக கிம் ஜாங் உன் கவச ரயிலை பயன்படுத்துவார் என கணிக்கப்பட்டுள்ளது. அவர் இரு நாட்டு எல்லை வழியாக வந்து, அருகில் உள்ள ரஷ்ய நகரான விளாடிவோஸ்டோக்கில் அதிபர் புதினை சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. […]

இலங்கை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்: யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்களின் புதிய அத்தியாயம்!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளனர். பௌதிக பிரிவில் 6 மாணவர்களும் உயிரியல் பிரிவில் 5 மாணவர்களும் யாழ்ப்பாணம் மாவட்ட மட்ட தர நிலையில் இடம்பிடித்துள்ளனர். உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஆனந்தஜோதி வித்தியாஷாகர் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதல் நிலையும் தேசிய மட்டத்தில் 9 நிலையும் பெற்றுள்ளார். கணிதப்பிரிவில் யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் ஸ்ரீபண்டாகரன் சினேகன் முதல் […]

இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு!

  • September 5, 2023
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிராக யாழ் நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தன்று , யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கரிநாள் பேரணியில் கலந்து கொண்டு , அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ச்சிாக யாழ் நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று […]

இலங்கை

மருத்துவச்சிகள் பற்றாக்குறையால் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் ஆபத்தில்?

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு நிலவும் பற்றாக்குறையின் விளைவாக நாட்டில் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் சுமார் 3,000 மருத்துவச்சிகள் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவச்சிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். மேலும், இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். “இந்தப் பற்றாக்குறை தொடருமானால், குடும்பச் சுகாதாரச் சேவையில் […]

இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!

  • September 5, 2023
  • 0 Comments

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் லொறி ஒன்று மற்றுமொரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறியின் சாரதி காயமடைந்த நிலையில், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்த சாரதியின் கவனக்குறைவே விபத்து ஏற்பட காரணம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சதர்ன் எக்ஸ்பிரஸ் கலனிகம போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

விஞ்ஞான பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி

  • September 5, 2023
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி டேகா உமாசங்கர் முதலாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். எதிர்காலத்தில் சிறந்த வைத்திய நிபுணராக வருவதற்கு ஆசைப்படுவதாகவும் தனக்கு கற்பதற்கு உதவி அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதேவேளை திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவி ஜகுபர் றிஸ்னி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார். தந்தை கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் விஞ்ஞான உயிரியல் பிரிவில் கல்வி கற்று வந்த […]

இலங்கை

மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்ய அனுமதி!

  • September 5, 2023
  • 0 Comments

மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, வரைவினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. மின்சார முச்சக்கரவண்டிகளின் உற்பத்தியிலும், பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் முச்சக்கரவண்டிகளை மின்சாரத்தில் இயக்குவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் வாகனச் சட்டத்தின் விளக்கத்தின்படி, ஒரு மோட்டார் முச்சக்கரவண்டியின் கர்ப் எடை 500 கிலோவும், மொத்த எடை 1,000 கிலோவும் இருக்க வேண்டும். இதன்படி, மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கு உள்ள […]

பொழுதுபோக்கு

19 வயதேயான கவர்ச்சி கன்னியை தட்டி தூக்கியது விஜய் டிவி…

  • September 5, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த முறை யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்களை கொண்டு வர இருக்கிறார்கள். இதில் முதலாவதாக இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக இருக்கப் போகிறது. அதேபோல் போட்டியாளர்களையும் தரமாக இரக்க முயற்சி செய்து வருகிறார்கள். அதிலும் ரேகா நாயர், பப்லு ப்ரீத்திவிராஜ் போன்ற சர்ச்சையான போட்டியாளர்கள் பங்கு பெற இருக்கின்றனர். எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது காதல் […]

வட அமெரிக்கா

ஒன்றாரியோ மாகாண அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம்

  • September 5, 2023
  • 0 Comments

ஒன்றாறியோ மாகாணத்தின் அமைச்சரவையில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடமைப்பு அமைச்சராக கடமை ஆற்றி வந்த ஸ்டீவ் கிளார்க் நேற்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.பசுமை வலய வீடமைப்பு திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வீடமைப்பு அமைச்சர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வீடமைப்பு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.இவ்வாறான ஒரு பின்னணியில் முதல்வர் டக் போர்ட் அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய தீர்மானித்துள்ளார். இதன்படி […]

இலங்கை

ஏப்ரல் தாக்குதல் : சர்வதேச விசாரணையை நடத்த தயார்!

  • September 5, 2023
  • 0 Comments

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 04 ஊடகம் வெளியிட்ட காணொலி தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளோம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் இன்றைய (05.09) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தேவைப்பட்டால், சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளவும் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் […]