இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிராக யாழ் நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று , யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கரிநாள் பேரணியில் கலந்து கொண்டு , அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ச்சிாக யாழ் நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று (04.09) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இந்த சூழ்நிலையிலேயே அவர்களுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்