பொழுதுபோக்கு

19 வயதேயான கவர்ச்சி கன்னியை தட்டி தூக்கியது விஜய் டிவி…

விஜய் டிவியில் இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த முறை யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்களை கொண்டு வர இருக்கிறார்கள். இதில் முதலாவதாக இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக இருக்கப் போகிறது. அதேபோல் போட்டியாளர்களையும் தரமாக இரக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

அதிலும் ரேகா நாயர், பப்லு ப்ரீத்திவிராஜ் போன்ற சர்ச்சையான போட்டியாளர்கள் பங்கு பெற இருக்கின்றனர்.

எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது காதல் ட்ராக் ஒன்று போகும். ஆரவ்-ஓவியா, கவின்-லாஸ்லியா, அமீர்-பாவனி என பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் கிசுகிசுக்களில் பல ஜோடிகள் சிக்கி இருக்கின்றனர்.

அந்த வகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியிலும் கண்டிப்பாக காதல் ட்ராக் இடம்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் லாஸ்லியா கவின் உடன் காதல் சர்ச்சையில் சிக்கிய நிலையில் அவரது பெயரை கெடுத்துக் கொண்டார். அதன் பிறகு கதாநாயகியாக படங்களில் நடித்த நிலையில் அதுவும் சரியாக போகவில்லை. கவின் சினிமாவில் ஜெயித்தது மட்டுமின்றி திருமண வாழ்க்கையிலும் காதலித்து மோனிகாவை கரம் பிடித்து விட்டார்.

இப்போது லாஸ்லியாவை போலவே காதல் கிசுகிசுக்காக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரவீனா தாஹா போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார். ராட்சசன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் இரண்டாம் பாகம் தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் இவர் போடும் கவர்ச்சி போட்டோ ஷீட் புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

19 வயது ஆன ரவீனா தாஹா பிக் பாஸ்க்கு வருவது ரசிகர்கள் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கண்டிப்பாக ரவீனா காதல் சர்ச்சையில் சிக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விஜய் டிவியின் டிஆர்பி எகிற போகிறது.

 

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content