இலங்கை

யாழில் இளம் தாயொருவருக்கு நடந்த துயரம்

  • October 16, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் இளம் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று அவர் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா என்கிற 23 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைகளில் குடும்ப தகராறில் கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

ஐரோப்பா

மணமகன் இல்லை – தன்னையே திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பெண்

  • October 16, 2023
  • 0 Comments

பிரித்தானிவை சேர்ந்த 42 வயது சாரா வில்கின்ஸன், தமது வருங்கால கணவரை இன்னும் சந்திக்காத நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக அவர் தமது திருமண விழாவுக்காகப் பணம் சேமித்துகொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விமரிசையான விழாவாகக் கொண்டாடி, திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பது அவரின் கனவாக இருந்துள்ளது. அந்த கனவை நனவாக்கித் தன்னையே சாரா திருமணம் செய்துகொண்டார். விழாவுக்கு ஏற்பாடு செய்து, மோதிரம் வாங்கி, தமது திருமண விழாவை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் அவர் கொண்டாடினார். மணமகன் இல்லாததால் அது அதிகாரபூர்வ […]

வாழ்வியல்

அடிக்கடி ஏப்பம் வருவதற்கான காரணமும்.. தீர்வும்..

  • October 16, 2023
  • 0 Comments

ஏப்பம் என்பது உடலியல் ரீதியில் ஒரு இயல்பான காரியம். ஆனால் ஏப்பம் அடிக்கடி வந்தாலோ, அல்லது சத்தமாக அருகில் இருப்பவர்களுக்கு கேட்கும் அளவுக்கு இருந்தாலோ, அது தர்மசங்கடத்தை கொடுக்கும். உணவோடு நாம் விழுங்கக்கூடிய காற்று, வெளியேற்றும் நிகழ்வுதான் ஏப்பம் ஆகும். இந்நிலையில், அடிக்கடி ஏப்பம் விடுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இப்போது தெரிந்துகொள்வோம். பல சமயங்களில், தர்மசங்கடத்தை கொடுக்கும் ஏப்பம் ஏன் ஏற்படுகிறது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். உணவோடு நாம் விழுங்கக்கூடிய காற்று, […]

செய்தி

மனிதக் கண்ணுக்கு இணையான தொலைபேசி கமரா – Samsung நிறுவனத்தின் புதிய முயற்சி

  • October 16, 2023
  • 0 Comments

Samsung நிறுவனத்தின் கேலக்ஸி மாடல் போன்களில் 432 மெகா பிக்சல் கொண்ட அதிநவீன கேமராக்களை பொறுத்த அந்நிறுவனம் முயற்சித்து வருகிறது. தொலைத் தொடர்பு சாதனங்கள் உற்பத்தியில் புகழ்பெற்ற நிறுவனமான Samsung. தனது சந்தை மதிப்பை உயர்த்த தொடர்ந்து பல்வேறு புதுமைகளை தொலைத்தொடர்பு சாதனங்களில் புகுத்தி வருகிறது. குறிப்பாக ஆப்பிள், கூகுள் நிறுவனங்களுக்கு மாற்றாக Samsung நிறுவனமும் தன்னுடைய பயனாளர்களுக்கு உயரிய அதிநவீன தொழில்நுட்பங்களை அளிப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிலையில் Samsung நிறுவனம் தன்னுடைய […]

பொழுதுபோக்கு

திருமணம் செய்துகொள்ள தீர்மானம்… முறைப்படி விவாகரத்துக்கு தயாரான தனுஷ் -ஐஸ்வர்யா

  • October 16, 2023
  • 0 Comments

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்துக் கொண்டு 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் தற்போது பிரிந்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் இருவரும் பிரிந்து வாழ்கின்ற போதிலும் விவாகரத்து பெறவில்லை. இந்நிலையில், சமீப காலமாக இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து இருவருமே உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இருவரும் மீண்டும் சேர்ந்து […]

ஆசியா

இரக்கம் காட்டிய இஸ்ரேல் – தாகத்தால் தவித்த மக்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

  • October 16, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே இரு நாடுகளிலும் கடுமையாக உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் நடத்தும் வான்வழி தாக்குதலால் காசாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடக்கு காசாவில் இருந்து நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் குறிப்பிட்ட பாதை வழியாக மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அனுமதி வழங்கியது. அந்த சமயத்தில் […]

உலகம்

புதிய சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ – 99 பிரம்படிகளா?

  • October 16, 2023
  • 0 Comments

பிரபலக் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு 99 பிரம்படிகள் தண்டனையாக விதிக்கப்படலாம் என ஈரானிய ஊடகங்கள் சில தெரிவித்திருக்கின்றன. ஏற்கெனவே காதலி இருக்கும்போது அவர் ஓவியர் பாத்திமா ஹமீமியை அணைத்து முத்தமிட்டதற்காக அந்தத் தண்டனை எனக் கூறப்படுகிறது. ஆசிய சேம்பியன்ஸ் லீக் போட்டிக்காக ரொனால்டோ அல்-நாசர் அணியுடன் ஈரானியத் தலைநகர் டெஹ்ரானுக்குச் சென்றார். அப்போது ஹமீமி அவருக்கு இரு ஓவியங்களை அன்பளிப்பாக வழங்கினார். ஹமீமியின் உடல் 85 சதவீதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய குழு மோதல் – சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • October 16, 2023
  • 0 Comments

பிரான்ஸில் சிறுவன் ஒருவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 93 ஆம் மாவட்டத்தில் உள்ள Saint-Ouen நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Saint-Ouen நகர்பகுதியில் இளைஞர்களுக்கு இடையே குழு மோதல் ஒன்று வெடித்திருந்தது. அதன்போது 16 வயதுடைய சிறுவன் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. படுகாயமடைந்த சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், இந்த மோதல் தொடர்பாகவும், துப்பாக்கிச்சூடு தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு […]

ஐரோப்பா

இஸ்ரேலுக்கு எதிராக கண்டனம் விடுத்துள்ள 21 நாடுகள் : போரை கைவிடுமாறு கோரிக்கை

  • October 16, 2023
  • 0 Comments

இஸ்ரேலின் காஸா முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என 21 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. ஒரு வாரத்திற்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரிப்பது குறித்து சர்வதேச சமூகம் கவலை தெரிவித்துள்ளது.இருப்பினும் இஸ்ரேல் தொடர்ந்து காஸா மீது குண்டுவீசியும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களைத் தாக்கியும் வருகிறது. இந்த நிலையில் பல நாட்டு அரசாங்கங்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றன. அல்ஜீரிய வெளிவிவகார […]

இலங்கை

2024 பாதீட்டில் மண்ணெண்ணெய் மானியம் – அமைச்சர் மகிந்த அமரவீர

  • October 16, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு 2024 பாதீட்டில் மானிய அடிப்படையில் மண்ணெண்ணை பெற்றுக் கொடுப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விவசாயிகள் சார்பில் முன்வைத்த கோரிக்கைக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கிணறுகளை நம்பியே விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் சிறுபோக பயிர்செய்கைக்கான மண்ணெண்ணையில் இயங்கும் நீர்ப்பம்பிகளை விவசாயிகள் காலங்காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். […]