உலகம் செய்தி

உலக பாக்சிங் சாம்பியன் சுட்டுக்கொலை: தென்னாபிரிக்காவில் பயங்கரம்

உலக பாக்சிங் சாம்பியன் சுட்டுக்கொலை: தென்னாபிரிக்காவில் பயங்கரம்

தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே, முன்னாள் உலக பாக்சிங் சாம்பியன் சொலானி “லாஸ்ட் பார்ன்” டேட்டே Zolani “Last Born” துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினரும் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.

38 வயதான டேட்டே, எம்தான்சேனே (Mdantsane) நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தடைந்தபோது, முகமூடி அணிந்த இரு ஆயுதமேந்திய நபர்கள் வாகனத்திலிருந்து இறங்கி அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதுகுறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் கேட்டன் மெக்கென்சி வெளியிட்ட அறிக்கையில், “யார் இதைச் செய்தார்கள் அல்லது எதற்காகச் செய்தார்கள் என்பது குறித்து நான் இப்போதைக்கு யூகிக்க விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சமீபகாலமாக கொலைக் குற்றங்கள் சற்று குறைந்திருந்தாலும், உலக அளவில் அதிக கொலை விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாகவே தொடர்கிறது.

இந்நிலையில், உலக சாம்பியனின் இந்த படுகொலை அந்நாட்டின் வன்முறைக் குற்றங்கள் குறித்த கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.

மேலும், தென்னாப்பிரிக்காவின் மிக வெற்றிகரமான பல பாக்சிங் வீரர்களை உருவாக்கிய எம்தான்சேனே பகுதியில் இச்சம்பவம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேட்டேவுடன் பயணித்த 27 வயது பெண் ஒருவருக்கும் பலமுறை துப்பாக்கிச் சூடு பட்டதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாம்பியன் டேட்டேவின் சாதனைகள்

2014-இல் ஜப்பானின் கோபே நகரில் நடைபெற்ற போட்டியில் தேயிரு கினோஷிதாவை வீழ்த்தி (IBF) ஜூனியர் பேண்டம்வெயிட் உலக பட்டத்தை டேட்டே வென்றார். பின்னர் டபிள்யூ.பி.ஓ (WBO) பேண்டம்வெயிட் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு பிரித்தானியா வீரர் ஜேசன் கன்னிங்ஹாமிற்கு எதிரான போட்டிக்குப் பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில், தடைசெய்யப்பட்ட தூண்டுதல் மருந்தைப் பயன்படுத்தியது உறுதியானதால் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடைக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது.

நவம்பர் 2017-இல் பெல்பாஸ்ட் நகரில் நடைபெற்ற உலக பட்டத்திற்கான போட்டியில், சக தென்னாப்பிரிக்க வீரர் சிபோனிசோ கோனியாவை வெறும் 11 விநாடிகளில் ‘நாக் அவுட்’ செய்து வீழ்த்தியதே சர்வதேச அளவில் டேட்டேவின் மிகச்சிறந்த சாதனையாக நினைவு கூரப்படுகிறது. இது உலக பட்டத்திற்கான போட்டி ஒன்றில் பதிவான அதிவேக வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி