வாழ்வியல்

அடிக்கடி ஏப்பம் வருவதற்கான காரணமும்.. தீர்வும்..

ஏப்பம் என்பது உடலியல் ரீதியில் ஒரு இயல்பான காரியம். ஆனால் ஏப்பம் அடிக்கடி வந்தாலோ, அல்லது சத்தமாக அருகில் இருப்பவர்களுக்கு கேட்கும் அளவுக்கு இருந்தாலோ, அது தர்மசங்கடத்தை கொடுக்கும்.

உணவோடு நாம் விழுங்கக்கூடிய காற்று, வெளியேற்றும் நிகழ்வுதான் ஏப்பம் ஆகும். இந்நிலையில், அடிக்கடி ஏப்பம் விடுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.

பல சமயங்களில், தர்மசங்கடத்தை கொடுக்கும் ஏப்பம் ஏன் ஏற்படுகிறது என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். உணவோடு நாம் விழுங்கக்கூடிய காற்று, வெளியேற்றும் நிகழ்வு தான் ஏப்பம். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், அதிக அளவில் ஏப்பம் விடுவது பல சமயங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.

Is Burping a Sign of Colon Cancer?

வயிற்றையும் தொண்டையும் இணைக்கும் உணவுக்குழாயில் அதிகமாக இருக்கும் காற்று வெளியேறும் போது ஏப்பம் நிகழ்கிறது. வேக வேகமாக சாப்பிடும் போது, வேக வேகமாக தண்ணீர் குடிக்கும் போது அல்லது வேகமாக எதையாவது குடிக்கும் போது ஏப்பம் வரலாம்.

கர்ப்பம் ஹார்மோன்களில் மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோன் ஸ்பைன்க்டர் தசையை தளர்த்தி அதன் மூலம் ஏப்பம் ஏற்பட காரணமாகிறது

சில வகையான உணவை வயிறு எளிதில் ஜீரணிக்க முடியவில்லை என்னும் போது, அடிக்கடி ஏப்பத்தை ஏற்படுத்தும். சில வகையான உணவை ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும் இது நிகழலாம். அலர்ஜியாகும் உணவு வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஏப்பம் அதிகரிக்கும்.

Is It Appropriate To Burp In Other Countries?

ஜீரணக்க எளிதாக இல்லாத ஹெவியான உணவு நெஞ்செரிச்சல், புளிப்பான ஏப்பத்தை உண்டு செய்யும். இதனால் அமிலத்தன்மை அதிகரித்து அதை தொடர்ந்து ஏப்பம் ஏற்படும்.

தைராய்டு போன்ற ஹார்மோன் கோளாறுகள் கொண்டிருப்பவர்களுக்கு இயல்பாகவே இரத்தத்தில் அமிலத்தன்மை இருக்கும். அவர்களுக்கும் ஏப்பம் அதிக அளவில் ஏற்படும்.

மலச்சிக்கல் என்பது பெரும்பாலானோருக்கு ஏற்படக்கூடிய மற்றொரு செரிமான பிரச்சனையாகும். இது சிலருக்கு அடிக்கடி வரலாம். இது அடிக்கடி ஏப்பம் வருவதற்கு வழிவகுக்கும்.

Excessive Burping: 7 Things That Might Be Causing This Symptom | SELF

 

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content