காஸாவை அண்மித்த பகுதியில் இருந்து வௌியேற்றப்பட்ட இலங்கையர்கள்
காஸாவை அண்மித்த பகுதியில் இருந்து 13 இலங்கையர்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார இந்த விடயத்தை தெரிவித்தார். காஸாவை அண்மித்த பகுதியில் சுமார் 20 இலங்கையர்கள் தொழில் புரிந்து வந்த நிலையில், குறித்த 13 பேரும் வௌியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 7 பேரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக காணாமல் போன இலங்கையர்கள் இருவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே இடம்பெறும் […]













