ஐரோப்பா செய்தி

ரஷ்யா இராஜதந்திரத்தை விட தாக்குதல்களில் முதலீடு செய்கிறது – உக்ரைன் ஆதங்கம்

  • February 22, 2026
  • 0 Comments

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில ஒருவர் உயிரிழந்துள்ளார். கியேவ் (Kyiv), ஒடேசா (Odesa) மற்றும் கார்கிவ் (Kharkiv) பகுதிகளில் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாஸ்கோ ஒரே இரவில் 50 பொலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் ஏவியுள்ளது. அத்துடன் 297 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இடைமறிக்கப்பட்டதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷ்யா தொடர்ந்து இராஜதந்திரத்தை விட தாக்குதல்களில் முதலீடு செய்கிறது என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்துள்ளார்.

உலகம்

பொதுமன்னிப்பு கோரி 1500இற்கும் மேற்பட்ட கைதிகள் விண்ணப்பம்!

  • February 22, 2026
  • 0 Comments

வெனிசுலா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சட்டமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை மன்னித்து விடுவிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததை தொடர்ந்து  அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு வெனிசுலா அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய 379 கைதிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு

இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

  • February 22, 2026
  • 0 Comments

இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இன்று (22) இடம்பெற்றது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 […]

உலகம் செய்தி

சர்வதேச அங்கீகாரம் தேடும் சோமாலிலாந்து – அமெரிக்காவுக்கு கனிம வளங்களும் இராணுவ தளங்களும் வழங்க தயார் என அறிவிப்பு

  • February 22, 2026
  • 0 Comments

சோமாலியாவிலிருந்து பிரிந்து செயல்படும் சோமாலிலாந்து, சர்வதேச அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்கும் நிலையில், தனது கனிம வளங்கள் மற்றும் இராணுவ தளங்களை அமெரிக்காவிற்கு வழங்கத் தயாராக இருப்பதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலக அமைச்சர் காதர் ஹுசைன் அப்தி, AFP செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எட்டுவோம் என்ற நம்பிக்கையும் அவர் வெளியிட்டார். 1991 ஆம் ஆண்டு சோமாலியாவிலிருந்து சுயாட்சியை அறிவித்த சோமாலிலாந்து, இதுவரை பரவலான சர்வதேச அங்கீகாரம் […]

ஐரோப்பா

UKவில் வாடகை துறையில் காணப்படும் பாகுபாடு : புறக்கணிக்கப்படும் இளைஞர்கள்!

  • February 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தனியார் வாடகை துறையில் காணப்படும் நியாயமற்ற பாகுபாட்டின் காரணாக பெரும்பாலான இளைஞர்கள் வீடற்ற நிலைக்கு அல்லது பாதுகாப்பற்ற வாழ்க்கை நிலைமைகளுக்கு தள்ளப்படுவதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. வீடொன்றை வாடகைக்கு எடுக்க முடிந்தாலும் கூட குத்தகைதாரர்கள், வயது, தொழில், குடும்ப உத்தரவாததாரர் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அவர்களை நிராகரிப்பதாக EveryYouth கண்டறிந்துள்ளது. வாடகைதாரர்களின் உரிமைகள் சட்டம் சில குழுக்களுக்கு பாகுபாட்டிற்கு எதிராக புதிய பாதுகாப்புகளை அறிமுகப்படுத்தும் என்றாலும்,  இளம் வாடகைதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இது […]

ஐரோப்பா செய்தி

எப்ஸ்டீனைச் சந்திக்க வரிப்பணத்தில் இயங்கும் ஜெட் விமானங்களை ஆண்ட்ரூ பயன்படுத்தினாரா?

  • February 22, 2026
  • 0 Comments

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ வர்த்தக தூதுவராக பணியாற்றிய காலத்தில், ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்திக்க வரிப்பணத்தில் இயங்கும் ஜெட் விமானங்கள் அல்லது RAF தளங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பதை பொலிஸ் விசாரிக்க வேண்டும் எனமுன்னாள் பிரதமர் Gordon Brown கேட்டுக் கொண்டுள்ளார். ஆண்ட்ரூ தொடர்பில் பல சர்ச்சைக்குரிய விடயங்கள் வெளியாகின்ற போதிலும் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றார். ஆனாலும் ஆண்ட்ரூ குறித்த அரசியல் அழுத்தம் பிரித்தானியாவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் புதிய வரி தீர்மானம் -சர்வதேச சந்தையில் பதற்றம்

  • February 22, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் புதிய 15% உலகளாவிய வரி அறிவிப்பு, சர்வதேச வர்த்தக தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே 10% வரி ஒப்பந்தத்தில் இணைந்திருந்த நாடுகள், தங்களது பொருளாதார நலன்கள் பாதிக்கப்படுமா என்ற கவலையில் இருக்கலாம். குறிப்பாக வர்த்தக ஒப்பந்தங்களின் சட்டபூர்வ நிலை குறித்த கேள்விகள் எழும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவுடன் 10% வரி ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகளுக்கு சர்வதேச ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கே சிக்கல் […]

உலகம்

பண்டைய காலத்தில் மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் வியாபித்திருந்ததா? சர்ச்சையை கிளப்பிய பதில்!

  • February 22, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி (Mike Huckabee) மத்திய கிழக்கின் பெரும்பகுதி பைபிளில்  உள்ளடக்கப்பட்டுள்ளதாக  கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேர்காணல் ஒன்றில் நெறியாளர் இஸ்ரேலின் இருப்பு உரிமை மற்றும் பண்டைய நிலத்தில் யூத வேர்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஹக்கபி, ஆதியாகம புத்தகத்தை மேற்கோள் காட்டி யூப்ரடீஸ் நதி முதல் நைல் நதி வரை, மத்திய கிழக்கின் பெரும்பகுதியை உள்ளடக்கியிருப்பதாக கூறியுள்ளார். அத்துடன் “இஸ்ரேல் அரசு இப்போது வாழும் இந்த நிலத்தைப் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் மாணவர் கடன் வட்டி விகிதம் குறைப்பு – அரசியல் மோதல் தீவிரம்

  • February 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் மாணவர் கடன் வட்டி விகிதத்தை குறைப்பது தொடர்பாக அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்சர்வேடிவ் கட்சி தலைவர் கெமி படேனோக் (Kemi Badenoch), 2012 முதல் 2023 வரை வழங்கப்பட்ட திட்ட்ம் 2 (Plan 2) மாணவர் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டியை குறைப்பதாக அறிவித்துள்ளார். தற்போது இந்தக் கடன்களுக்கு சில்லறை விலைக் குறியீடு ஆர்.பி.ஐ (RPI – Retail Price Index) மற்றும் கூடுதலாக 3 சதவீதம் வரை வட்டி அறவிடப்படுகிறது. இந்நிலையில் வட்டியை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியில் சம வாய்ப்பு – அறிமுகமாகும் புதிய சட்டம்

  • February 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் வறுமையானோர் மற்றும் வசதியான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையிலான கல்வி வித்தியாசத்தை குறைக்க அரசு புதிய திட்டமொன்றை அறிவிக்க உள்ளது. மாணவர்கள் மேல்நிலைப் பாடசாலையை முடிக்கும் காலப்பகுதிக்குள், கல்விச் சாதனை வித்தியாசத்தை பாதியாகக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது புதிய கல்வி சீர்திருத்தங்கள் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கும் என கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் (Bridget Phillipson) தெரிவித்துள்ளார். விசேட கல்வித் தேவைகள் உள்ள மாணவர்களுக்கான ஆதரவு முறையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]