அரசியல் இலங்கை

லண்டன் உரை இரத்து குறித்து நாமல் அதிருப்தி

  • February 23, 2026
  • 0 Comments

லண்டனில் திட்டமிடப்பட்ட தமது உரைகள் இரத்து செய்யப்பட்டமை துரதிஷ்டவசமான சம்பவம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச x தளத்தில் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் விவாதங்களை தீர்க்கும் இடங்களாக அமைய வேண்டுமே தவிர, அச்சுறுத்தல்கள் மூலம் அதனை மௌனிக்க செய்ய கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் பல தலைமுறை அனுபவத்தை கொண்ட பல்கலைக்கழகங்களில் நடத்தப்படவிருந்த பகிரங்க விவாதங்களில் உரையாற்ற தாம் மிகுந்த ஆவலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தனது கருத்துக்களை கடுமையாக எதிர்ப்பவர்களுடன், நேரடி விவாதத்தை […]

உலகம்

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோவின் வழக்கு குறித்து ஆய்வு செய்யும் ICC நீதிமன்றம்!

  • February 23, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே ( Rodrigo Duterte) போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக்காக முன்னெடுத்த மனித குலத்துக்கு  எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விசாரணை இன்று முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும், விசாரணை நடத்தவும் போதுமான ஆதாரங்கள் உள்ளதா என்பது தொடர்பில் பரிசீலனை செய்யப்படும். இருப்பினும் மேற்படி விசாரணையின்போது அவர் முன்னிலையாக […]

பொழுதுபோக்கு

ராஷ்மிகாவுக்கு 26 ஆம் திகதி டும்…டும்…டும்!

  • February 23, 2026
  • 0 Comments

தாங்கள் திருமண பந்தத்தில் சங்கமிக்கவுள்ளதை விஜய் தேவரகொண்டா Vijay Deverakonda, ராஷ்மிகா ஜோடி Rashmika முதன் முறையாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 26 ஆம் திகதி இவர்களின் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4-ம் ஆம் திகதி திருமண வரவேற்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இவர்களின் இணைவு தொடர்பில் இதற்கு முன்னரும் தகவல்கள் வெளியாகி இருந்தாலும், தற்போதே அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தக் கடிததிற்கு […]

இலங்கை செய்தி

GSP+ வரிச்சலுகையை தக்க வைப்பதில் இலங்கை தீவிரம்!

  • February 23, 2026
  • 0 Comments

ஜி.எஸ்.பி. பிளஸ் GSP+ வரிச்சலுகையை தக்க வைத்துக்கொள்வதற்குரிய முயற்சியில் இலங்கை தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தால் European Union இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் காலாவதியாகியுள்ளது. இந்நிலையிலேயே அச்சலுகையை நீடித்துக்கொள்வதற்குரிய இராஜதந்திர முயற்சி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் Emmanuel Macron ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake நடத்திய சந்திப்பின்போது இது பற்றி பேசப்பட்டது. புதுடெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாக இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சு […]

இலங்கை செய்தி

பிரதான உரைகள் ரத்து: எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் லண்டன் சென்றார் நாமல்!

  • February 23, 2026
  • 0 Comments

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa, லண்டன் சென்றடைந்துள்ளார். லண்டனில் அவர் பௌத்த விகாரையில் வழிபடுவது தொடர்பான படங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. முக்கிய இரு உரைகள் மற்றும் சில சந்திப்புகளுக்காக நாமல் ராஜபக்ச லண்டன் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். எனினும், நாமலின் லண்டன் உரைகளுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. இந்நிலையில் திட்டமிடப்பட்ட போராட்டங்கள் தொடர்பான […]

உலகம்

அணுசக்தி செறிவூட்டல் : அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அமெரிக்கா, ஈரான்!

  • February 23, 2026
  • 0 Comments

அமெரிக்காவும் ஈரானும் வரும் வியாழக்கிழமை அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் நடைபெறவுள்ளதாக  ஓமானின் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைடி (Badr al-Busaidi) உறுதிப்படுத்தினார். ஈரானின் உயர்மட்ட இராஜதந்திரி அப்பாஸ் அரக்சி, ஒரு இராஜதந்திர தீர்மானத்திற்கு நம்பிக்கை தெரிவித்ததாகவும், ஒரு வரைவு திட்டம் சில நாட்களுக்குள் தயார் செய்யப்படும் எனக் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் தனது இராணுவ இருப்பை கணிசமாக அதிகரித்துள்ள அமெரிக்க நிர்வாகம், அணுசக்தி […]

இந்தியா

வரி விவகாரம்: இந்தியா, அமெரிக்க பேச்சு ஒத்திவைப்பு!

  • February 23, 2026
  • 0 Comments

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்கா USA மற்றும் இந்தியாவுக்கிடையில் India இன்று (23) வாஷிங்டனில் Washington நடைபெறவிருந்த பேச்சு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட புதிய வரி விகிதங்களை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் President Trump கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார். அதுமட்டுமல்லாது இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்க சட்டத்தின் 122-வது பிரிவின் கீழ் 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவிப்பு விடுத்தார். அடுத்த […]

ஆஸ்திரேலியா

ட்ரம்பின் வரிப்போருக்கு ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பு!

  • February 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதியால் US President விதிக்கப்பட்டுள்ள புதிய 15 சதவீத வரிக்கு ஆஸ்திரேலியா Australia கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. மேற்படி வரிப்போரால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்பு தொடர்பிலும், அதனை தடுப்பதற்குரிய வழிமுறைகள் குறித்தும் ஆஸ்திரேலியா ஆராய்ந்துவருகின்றது. நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என ஆஸ்திரேலியா வர்த்தகத்துறை அமைச்சர் Australian Trade Minister தெரிவித்தார். இது தொடர்பில் அமெரிக்காவிலுள்ள தமது நாட்டு தூதரகம் ஊடாக உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் […]

உலகம்

மெக்சிகோவில் அமைதியின்மை : நகரமெங்கும் துப்பாக்கிச்சூடு சத்தம்!

  • February 23, 2026
  • 0 Comments

மெக்சிகோ இராணுவம்  ஜலிஸ்கோ புதிய தலைமுறை  கார்டெலின்  தலைவரை சுட்டு கொலை செய்ததை தொடர்ந்து நகரமெங்கும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஜலிஸ்கோ புதிய தலைமுறை கார்டெல் தலைவர் நெமேசியோ ரூபன் ஒசேகுரா செர்வாண்டஸ் (Nemesio Rubén Oseguera Cervantes) நேற்று இராணுவ நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டார். ட்ரம்பின் நிர்வாகம் அவரை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பின் தலைவராக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நகரம் முழுவதும் வன்முறைகள் வெடித்துள்ளன. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதுடன், வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.  மற்றும் பெட்ரோல் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், சாலை […]

விளையாட்டு

சிம்பாப்வே,மேற்கிந்திய தீவுகள் இன்று பலப்பரீட்சை!

  • February 23, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடர்பில் சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் West Indies மற்றும் சிம்பாப்வே அணிகள் Zimbabwe இன்று (23) மோதுகின்றன. Wankhede மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தொடரில் சிம்பாப்வே அணி சிறப்பாக விளையாடி வருகின்றது. முதல் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்தது. மறுபுறத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும் சிறப்பாக ஆடி வருகிறது. குரூப் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றிக்கனியை ருசித்தது. அரையிறுதி வாய்ப்பை எதிர்நோக்கி […]