விளையாட்டு

சிம்பாப்வே,மேற்கிந்திய தீவுகள் இன்று பலப்பரீட்சை!

  • February 23, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடர்பில் சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் West Indies மற்றும் சிம்பாப்வே அணிகள் Zimbabwe இன்று (23) மோதுகின்றன. Wankhede மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தொடரில் சிம்பாப்வே அணி சிறப்பாக விளையாடி வருகின்றது. முதல் சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்தது. மறுபுறத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும் சிறப்பாக ஆடி வருகிறது. குரூப் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றிக்கனியை ருசித்தது. அரையிறுதி வாய்ப்பை எதிர்நோக்கி […]

இலங்கை செய்தி

ஜெனிவா சமர் இன்று ஆரம்பம்!

  • February 23, 2026
  • 0 Comments

இராஜதந்திர சமரெனக் கருதப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் UN Human Rights Council 61 ஆவது கூட்டத்தொடர் இன்று (23) ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இம் மாநாட்டில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மதிப்பீடு செய்யப்படவுள்ளது. குறிப்பாக இலங்கை மனித உரிமை நிலைவரம் மற்றும் பொறுப்புகூறல் பற்றியும் ஜெனிவா மாநாட்டில் அவதானம் செலுத்தப்படவுள்ளது. ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி தலைமையிலான குழு மாநாட்டில் பங்கேற்கவுள்ளது.

உலகம்

நியூயார்க்கில் அவசரநிலை அறிவிப்பு : பாடசாலைகளுக்கு விடுமுறை!

  • February 23, 2026
  • 0 Comments

பனிப்புயல் எச்சரிக்கை அமுலில் உள்ள நிலையில், நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) நேற்று அவசரக்கால நிலையை அறிவித்தார். இதன்படி நேற்று முதல் இன்று மதியம் வரை  நியூயார்க் நகர வீதிகளில் அத்தியாவசியமற்ற வாகனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. தெருக்கள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் வழக்கமான போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. அத்துடன் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. நியூயார்கின் தேசிய வானிலை சேவை 17 முதல் 24 அங்குல பனிப்பொழிவு பதிவாகும் […]

உலகம்

மலேசியாவை அதிகாலை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • February 23, 2026
  • 0 Comments

மலேசியாவின் சபா ( Sabah)  மாநிலத்தில் உள்ள போர்னியா (Borneo) தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 7.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடலோர மாநில தலைநகர் கோட்டா கினாபாலுவிலிருந்து ( Kota Kinabalu)  வடகிழக்கே 100 கி.மீ.க்கும் குறைவான ஆழத்தில் மேற்படி நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எந்த எச்சரிக்கையையும் வெளியிடப்படவில்லை. […]

கருத்து & பகுப்பாய்வு

ஒரு கிராம் தங்கம் 1 இலட்சம் ரூபா – அதிரும் தங்க விலை கணிப்பு

  • February 22, 2026
  • 0 Comments

உலகளாவிய பொருளாதார நிலை மாற்றங்களால் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இந்தியாவின் தங்கமயில் ஜுவல்லரி உரிமையாளர் ரமேஷ் சமீபத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 23,000 முதல் 25,000 அமெரிக்க டொலர் வரை செல்ல வாய்ப்பு இருக்கலாம் என தெரிவித்தார். ஆனால் பொருளாதார ஆய்வாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் இதனை உடனடி நிகழ்வாகக் கருதக் கூடாது என்றும், அதிகரிப்பு நீண்டகால பணவீக்கம், நாணய மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலைமைகள் மூலம் மட்டுமே நிகழும் என்றும் […]

இலங்கை செய்தி

இலங்கை அணியை விமர்சித்த சங்கக்கார

  • February 22, 2026
  • 0 Comments

இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று (22) இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 51 ஓட்டங்களால் அடைந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இந்த தோல்விக்கு துடுப்பாட்ட வீரர்களின் செயல்பாடு முக்கிய காரணமாக இருக்கிறது என்று விமர்சித்தார். இந்த தோல்வி குறித்து, குமார் சங்கக்கார தனது எகஸ் தளத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, பந்துவீச்சாளர்கள் திட்டமிடலும் அதனைச் செயல்படுத்தும் விதமும் […]

ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூ குறித்த சர்ச்சை – அரசியல் அழுத்தத்தால் பதறும் பிரித்தானியா

  • February 22, 2026
  • 0 Comments

பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குறித்த பொலிஸ் விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரைச் சுற்றிய அரசியல் அழுத்தம் இன்றும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் அவர் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் உள்ளிட்ட அரசியல் வட்டாரங்களில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஆண்ட்ரூ தற்போது அரியணை வாரிசுரிமை வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார். அவரை அந்த வரிசையில் இருந்து […]

ஐரோப்பா

மொஸ்கோவில் 04 விமான நிலையங்களின் செயற்பாடுகள் நிறுத்தம்!

  • February 22, 2026
  • 0 Comments

மொஸ்கோவில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து நான்கு விமான நிலையங்களின்  செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொஸ்கோவிற்கு செல்லும் வழியில் குறைந்தது ஏழு ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மேயர் செர்ஜி சோபியானின் (Sergei Sobyanin) தெரிவித்துள்ளார். இதேவேளை தெற்கு ஒடேசா (Odesa) பிராந்தியத்தில் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்யா தொடர் தாக்குதல்களை முன்னெடுத்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. தொடர்புடைய செய்தி ரஷ்யா இராஜதந்திரத்தை விட தாக்குதல்களில் முதலீடு செய்கிறது – உக்ரைன் ஆதங்கம்  

இலங்கை செய்தி

இனி எரிவாயுவுக்கு தட்டுப்பாடில்லை – 3900 மெட்ரிக் டொன் எரிவாயுவுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்

  • February 22, 2026
  • 0 Comments

3900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இதைப் பயன்படுத்தி 300,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3900 மற்றும் 3700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் முறையே எதிர்வரும் 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன. எவ்வாறாயினும், இன்றைய தினமும் (22) நாட்டின் பல […]

உலகம்

காசா மறுசீரமைப்பு திட்டம் : ரஃபாவில் துருப்புக்களை நிலைநிறுத்தும் அமெரிக்கா!

  • February 22, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது காசா மறுசீரமைப்பு திட்டத்தின் விவரங்களை வெளியிட்டுள்ளார். இந்த அமைதிவாரிய திட்டத்தின் முதல் பணியாக ரஃபாவில்  அமெரிக்க ஜெனரல் தலைமையிலான சர்வதேச நிலைப்படுத்தல் படையை நிலைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கமைய இந்தோனேசியா 8000 துருப்புக்களை முதற்கட்டமாக அனுப்ப உறுதியளித்துள்ளது. அத்துடன் காசாவில் ஹமாஸை நிராயுதபாணியாக்குவதே இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம்  மொராக்கோ, கஜகஸ்தான், கொசோவோ மற்றும் அல்பேனியாவும் வீரர்களை அனுப்ப உறுதியளித்துள்ளதாக  அவர் கூறியுள்ளார். அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை மீண்டும் […]