இலங்கை

திருகோணமலை மார்பில் பீச் கடற்கரையில் குளிப்பதற்கு தடை!!

  • February 21, 2026
  • 0 Comments

திருகோணமலை மார்பில் பீச் கடற்கரையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் கடலில் குளிப்பதற்கு முற்பட்டு வருவதாகவும் இதனால் உயிர் சேதங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த அனர்த்தத்தை தடுக்கும் முகமாக மார்பில் பீச் பகுதியில் குளிப்பதற்கு தற்பொழுது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை குறித்த வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் மார்பில் பீச் கடற்கரைக்கு செல்வதற்கு பணம் அறவிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்ற இதே வேளையில் குறித்த வீதி […]

இலங்கை செய்தி

அக்குரேகொட படுகொலை சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

  • February 21, 2026
  • 0 Comments

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து சென்ற நபர் ஒருவர் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கஹதுவ பிரதேசத்தைச் சேர்ந்த அவர், இந்தக் கொலையை வழிநடத்தியதாகக் கூறப்படும் ‘கரந்தெனிய சுத்தா’ எனப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகா என பொலிஸார் கூறுகின்றனர். இதற்கமைய, துப்பாக்கிதாரியை ஏற்றிச் சென்ற காரும், நாட்டை விட்டுத் தப்பிச் […]

இந்தியா செய்தி

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வேண்டாம்: காங்கிரஸ் வலியுறுத்து!

  • February 21, 2026
  • 0 Comments

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை பா.ஜ.க. அரசு நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே, காங்கிரஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் இந்திய-அமெரிக்க கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களைப் பயன்படுத்தி, […]

இலங்கை செய்தி

பௌத்த மதத்தையோ மதத் தலைவர்களையோ இழிவுபடுத்த எவருக்கும் உரிமை கிடையாது

  • February 21, 2026
  • 0 Comments

பௌத்த மதத்தையோ அல்லது எந்தவொரு மதத் தலைவர்களையோ இழிவுபடுத்த எவருக்கும் உரிமை கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். திஸ்ஸமஹாராம, கமுனுபுரவில் உள்ள ஸ்ரீ விசுத்தராம விகாரையில் அடிக்கல் நாட்டு விழாவில் இன்று (21) கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “ நாட்டின் விகாரைக் கட்டமைப்புகள் தற்போது போதிய கவனமின்றி சிதைவடைந்து வருகிறது. அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி பௌத்த மதத்தைப் போற்றிப் பாதுகாப்பதற்காக ரணசிங்க […]

உலகம் செய்தி

தாய்லாந்தில் பரவிவரும் இனந்தெரியாத வைரஸ் : 72 புலிகள் உயிரிழப்பு!

  • February 21, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் இனந்தெரியாத வைரஸ் தொற்றின் காரணமாக சுமார் 72 புலிகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் வடக்கு மாகாணமான சியாங் மாயில் (Chiang Mai) உள்ள வனவிலங்கு பூங்காக்களில் பிப்ரவரி 8 முதல் 19 வரை இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன. கால்நடை அதிகாரிகளின் முதற்கட்ட சோதனைகளில் பூனைகளிடம் இருந்து வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இறந்த புலிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (anine distemper virus) மற்றும், மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா  (Mycoplasma bacteria) தொற்றும்  […]

உலகம்

ஈரான் விவகாரம் – பொறுமையிழக்கும் ட்ரம்ப்!

  • February 21, 2026
  • 0 Comments

ஈரான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுமை இழந்து வருவதாக முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரித்துள்ளார். ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது. ஈரரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். இல்லையென்றால் கெட்ட விஷயங்களை” எதிர்கொள்ள நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எச்.ஆர். மெக்மாஸ்டர் (H.R. McMaster), “ஈரானிய ஆட்சிக்கு […]

உலகம் செய்தி

விடுதலைப் புலிகளின் கொள்கைகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்பட்டு வருகின்றன – நாமல்

  • February 21, 2026
  • 0 Comments

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களது கொள்கைகள் இன்றும் பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர் வலைப்பின்னல்கள் ஊடாகச் செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்த மாத இறுதியில் அவர் உரையாற்றவிருந்தார். இந்நிலையில் கடும் அழுத்தங்களால் விரிவுரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே […]

இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகருக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

  • February 21, 2026
  • 0 Comments

“இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அநுர அரசே இதற்குப் பதில் சொல்!” இவ்வாறு வலியுறுத்தி யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று சனிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமராட்சி – கரவெட்டியைச் சேர்ந்த ஆசிரியரும் ஊடகவியலாளருமான சு.இராமச்சந்திரன், கடந்த 15.02.2007 அன்று பணி முடிந்து வீடு திரும்பிய போது, துன்னாலை கலிகைச் சந்தி இராணுவ முகாமில் வைத்து இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பியினராலும் கைது செய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்டார். இச்சம்பவம் இடம்பெற்று 19 […]

ஐரோப்பா

ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவு – 05 பேர் உயிரிழப்பு!

  • February 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரிய ஆல்ப்ஸ் (Austrian Alps) மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலத்திற்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 03 பேர் உயிரிழந்தனர். பின்னர் அதற்கு அருகிலுள்ள மற்றொரு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பலி எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது. இந்த குளிர்காலத்தில், பனிச்சரிவு காரணமாக ஆஸ்திரியாவில் 21 இறப்புகள் பதிவாகியுள்ளன. […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் 40% மக்கள் AI வழிகாட்டுதலையே நம்புகின்றனர் – நிபுணர்கள் எச்சரிக்கை

  • February 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 40 வீத மக்கள் நிதி ஆலோசனைகளுக்காக ChatGPT, Gemini மற்றும் Co-Pilot போன்ற AI செயற்கை நுண்ணறிவு தளங்கள் பயன்படுத்துவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மனித நிதி ஆலோசகர்கள் அதிக செலவானதால், பலர் கட்டுப்பாடற்ற AI வழிகாட்டுதலுக்கு மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. AI வழங்கும் தகவல்கள் தவறானவையாகவோ அல்லது நுகர்வோருக்கு பொருந்தாமலோ இருக்கலாம் என முதலீடு மற்றும் சேமிப்பு கூட்டணியின் கொள்கைத் தலைவர் சோஃபி லெக்ராண்ட்-கிரீன் (Sophie Legrand-Green), எச்சரித்துள்ளார். கணக்கெடுப்பின் படி, 18 முதல் 28 வயதுக்கு […]