உலகம்

பண்டைய காலத்தில் மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் வியாபித்திருந்ததா? சர்ச்சையை கிளப்பிய பதில்!

இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி (Mike Huckabee) மத்திய கிழக்கின் பெரும்பகுதி பைபிளில்  உள்ளடக்கப்பட்டுள்ளதாக  கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேர்காணல் ஒன்றில் நெறியாளர் இஸ்ரேலின் இருப்பு உரிமை மற்றும் பண்டைய நிலத்தில் யூத வேர்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஹக்கபி, ஆதியாகம புத்தகத்தை மேற்கோள் காட்டி யூப்ரடீஸ் நதி முதல் நைல் நதி வரை, மத்திய கிழக்கின் பெரும்பகுதியை உள்ளடக்கியிருப்பதாக கூறியுள்ளார்.

அத்துடன் “இஸ்ரேல் அரசு இப்போது வாழும் இந்த நிலத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், அதில் அமைதி நிலவ விரும்புகிறோம், அவர்கள் ஜோர்டானைக் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. அவர்கள் சிரியாவைக் கைப்பற்ற முயற்சிக்கவில்லை, அவர்கள் ஈராக் அல்லது வேறு எங்கும் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. அவர்கள் தங்கள் மக்களைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.

ஹக்கபியின் இந்த கருத்துக்கு  மத்திய கிழக்கு நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. சர்வதேச சட்டத்தின் கொள்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அப்பட்டமாக மீறும் ஆபத்தான மற்றும் எரிச்சலூட்டும் கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்