இலங்கை

வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை

  • February 22, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவரது சமூக வலைத்தளத்தில் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் பொது இடங்களை பாதுகாக்கும் விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் வெற்றிலைப் பயன்படுத்துதல் மற்றும் எச்சில் துப்புதல் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து பல அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைத்தியசாலை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மனிதர்களை மீளவும் சந்திரனுக்கு அனுப்பும் முயற்சி – ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தி!

  • February 22, 2026
  • 0 Comments

வரும் மார்ச் மாதத்தில் மனிதர்களை மீளவும் சந்திரனுக்கு அனுப்ப நாசா இலக்கு வைத்துள்ளது.  இது கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரனுக்கு அனுப்படும் குழுவினரை குறிக்கிறது. ஆர்ட்டெமிஸ் II என்ற விண்கலத்தில்  சந்திரனின் மறுபக்கத்தை பார்க்க  பயணிக்கும் குறித்த குழுவினர்  10 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்புவார்கள். ஆடை ஒத்திகைக்குப் பிறகு ராக்கெட் எரிபொருளால் நிரப்பப்பட்டு கவுண்டவுன் வரிசைக்கு செல்லும் முக்கியமான சோதனை நடவடிக்கையில் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மார்ச் 6  (இங்கிலாந்தில் […]

உலகம்

ட்ரம்பின் பிடிவாதம் : பாதிக்கப்படும் உலக நாடுகள்!

  • February 22, 2026
  • 0 Comments

அமெரிக்க உச்ச நீதிமன்றம் பொருளாதார அவசரச் சட்டத்தின் கீழ் விதித்த வரிகளுக்கு எதிராகத் தீர்ப்பளித்ததை அடுத்து, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான தற்காலிக உலகளாவிய வரி விகிதத்தை மேலும் அதிகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் முடிவை விமர்சித்த அவர், நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கமைய நாடுகள் மீதான 10% உலகளாவிய வரியை 15 சதவீதமாக உயர்த்துவேன் என்று தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த செயற்பாடு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக […]

இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

  • February 22, 2026
  • 0 Comments

இலங்கைக்கு அருகில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று (22) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் […]

கருத்து & பகுப்பாய்வு

டெல்லி மாநாடு- இந்தியாவின் AI உட்கட்டமைப்பு உலகளாவிய அளவுக்கு விரிவடைகிறது

  • February 21, 2026
  • 0 Comments

டெல்லி AI உச்சி மாநாடு – உலகளாவிய AI வல்லரசாகும் பாதையில் இந்தியா டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாடு இந்தியாவை உலகளாவிய AI வல்லரசாக மாற்றும் அரசாங்கம் மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பின் பெரும் முயற்சிகளை வெளிப்படுத்தியது. முதலீடுகள், தொழிற்சாலை வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு ஆகியவற்றை ஒரே மேடையில் இந்த மாநாடுஇணைத்துள்ளது. மாநாட்டில் அரசாங்க அதிகாரிகள், தொழிற்துறை முன்னணியில் உள்ள நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் கலந்து, இந்தியாவின் AI உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் முன்முயற்சிகளை அறிவித்தனர். இந்த […]

உலகம்

நியூயார்கை தாக்கும் பனிப்புயல் : மில்லியன் கணக்கான மக்களுக்கு எச்சரிக்கை!

  • February 21, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயார்க் (New York) நகரில் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த எச்சரிக்கையானது நாளை காலை 6 மணி முதல் திங்கள் மாலை 6 மணிவரை செல்லுப்படியாகும் என அந்நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani)  தெரிவித்துள்ளார். குறைந்தது 13 முதல் 18 அங்குல பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாகவும், சில இடங்களில் அதிகமாக பனி பெய்ய வாய்ப்புள்ளது என்றும்  மேயர் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் விளைவாக […]

இலங்கை செய்தி

அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இடையே சந்திப்பு

  • February 21, 2026
  • 0 Comments

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் அண்மைக்கால பாதுகாப்பு அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது. டிட்வா புயல் அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு பிரதி அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார். அத்துடன் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இயங்கி வந்த தமிழ் உணவகம் ஒன்றின் மோசமான செயற்பாடு – 10,000 பவுண்ட்ஸ் அபராதம் விதிப்பு!

  • February 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உணவகம் ஒன்றுக்கு 10,000 பவுண்ட்ஸுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுத்தாலை (Southall) தளமாகக் கொண்ட உணவகம் ஒன்றில் ஈலிங் கவுன்சில் ஆய்வாளர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.  இதன்போது சுகாதாரம், பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அட்ரியன் பிசினஸ் சென்டரை தளமாகக் கொண்ட பாலாஜி ஃபுட்ஸ் லிமிடெட்டின்  (Balaji Foods Ltd)  இயக்குனர்   திலோகரம் கச்சாவா (Tilokaram Kachhawa)  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேகநபர்  மீது சரியான ஒப்புதல் இல்லாமல் […]

இலங்கை செய்தி

மாஹோ – ஓமந்தை ரயில் பாதை புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட இந்திய துணைத் தூதுவர்

  • February 21, 2026
  • 0 Comments

மாஹோ – ஓமந்தை ரயில் மார்க்க புனரமைப்பு பணிகளை இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் கலாநிதி சத்யன்ஜல் பாண்டே நேரில் சென்று பார்வையிட்டார். டிட்வா புயல் தாக்கத்தினால் சேதமடைந்த வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக இடம்பெற்று வருகிறது. 450 அமெரிக்க டொலர் செலவில் ரயில் பாதை புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்

  • February 21, 2026
  • 0 Comments

  2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். புறக்கணிப்புகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவைப் பிரமாணத்தினூடாக ஏற்பட்டுள்ள அநீதிகள் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சின் முன்பாக இவர்கள் மௌனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கு கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களும், நிர்வாக கிராம உத்தியோகத்தர் சங்கங்களும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன. பொது நிர்வாக, மாகாண […]