உலகம்

ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – உடல் கருகி நால்வர் பலி

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro)  நேற்று இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மூவர் கொலம்பிய சுற்றுலாப் பயணிகள் என பிரேசிலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிகவும் அடர்ந்த தாவரங்களைக் கொண்ட மலைப்பகுதி காடான திஜூகா  தேசிய பூங்காவில் ( Tijuca National Park) அந்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

இதில் விமானியும் மூன்று பெண்களும் “தீயில் கருகி உயிரிழந்ததாக தீயணைப்பு வீரர்கள் உறுதிப்படுத்தினர்.

மேலும், செங்குத்தான, எளிதில் சென்றடைய முடியாத ஒரு மலைப்பகுதியில் புகைந்துகொண்டிருக்கும் விமானத்தின் பாகங்களைக் காட்டும் படங்களையும் வெளியிட்டனர்.

உயிரிழந்தவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பயணிகள் கொலம்பியப் பெண்கள் என்றும், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்