இலங்கை

கொழும்பில் பயணி ஒருவரின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர்

  • December 18, 2023
  • 0 Comments

தனியார் பஸ்ஸொன்றின் நடத்துனர், பயணி ஒருவரின் காதை கடித்து விழுங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றில் நடத்துனருக்கும் பயணிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடத்துனர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக மெகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பயணி ஞாயிற்றுக்கிழமை (17) நாவின்ன பகுதியில் இருந்து தனியார் பஸ்ஸில் ஏறி கொடகம வரை பஸ்ஸிற்கான பணத்தை செலுத்திவிட்டு சாரதி இருக்கைக்கு அருகில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா வெள்ளப் பெருக்கு உயரும் என எச்சரிக்கை : 300 பேர் வெளியேற்றம்!

  • December 18, 2023
  • 0 Comments

வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் திடீர் வெள்ளம் காரணமாக ஏறக்குறை 300 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலைகள் நகருக்குள் புகுந்தமையால் மக்கள் அச்சத்தில் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ இராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன என்று போலீசார் தெரிவித்தனர். குயின்ஸ்லாந்து பொருளாளர் கேமரூன் டிக், வெளிவரும் பேரழிவு மாநிலத்தில் “பில்லியன் டாலர் தாக்கத்தை” ஏற்படுத்தும் என்றார். இதேவேளை திங்கட்கிழமை பிற்பகல் வெள்ள நீர் மீண்டும் உயரும் முன்  பாதுகாப்பான இடத்திற்கு […]

ஆசியா

தாவூத் இப்ராஹிம் மருத்துவமனையில் அனுமதி -இந்திய ஏஜெண்டுகள் மீது சந்தேகம்

  • December 18, 2023
  • 0 Comments

நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் உணவில் விஷம் கலக்கப்பட்டதால், அவர் பாகிஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகிறது. 1993, மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட நபர் தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து இந்த கோர சம்பவத்தை அவர் நிகழ்த்தியிருந்தார். அதற்கு முன்னரும், பின்னருமாக மும்பையை ஆட்டிப்படைக்கும் போதை, ஆயுதம் மற்றும் ஆட்கடத்தல்களிலும், நிலபேரங்கள், பாலிவுட் சினிமா உலகின் நட்சத்திரங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் […]

மத்திய கிழக்கு

காசாவில் மிகப் பெரிய சுரங்க பாதையை கண்டுப்பிடித்த இஸ்ரேல்!

  • December 18, 2023
  • 0 Comments

போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தங்களை மீறி காஸாவில் தனது தாக்குதலை மேற்கொண்டதால், ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் Erez எல்லைக் கடவைக்கு அருகில் ஹமாஸின் மிகப்பெரிய சுரங்கப்பாதையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை சிறிய வாகனங்கள் பயன்படுத்தும் அளவுக்கு பெரியதாக இருந்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த சுரங்கப்பாதையானது பல ஆண்டுகளுக்கு முன்பு பல மில்லியன் டொலர் செலவில் ஹமாஸ் அமைப்பினர் கட்டியிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதில் தண்டவாளங்கள், […]

வட அமெரிக்கா

மெக்சிகோ கிறிஸ்துமஸ் கொண்டாடத்தில் துப்பாக்கிச்சூடு : பலர் பலி!

  • December 18, 2023
  • 0 Comments

மெக்சிகோவின் வட-மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் உள்ள சால்வாடியேரா நகரில் நேற்று (17.12) கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவானாஜுவாடோ ஜாலிஸ்கோ கார்டெல் மற்றும் சினாலோவா கார்டெல் ஆதரவுடன் உள்ளூர் கும்பல்களுக்கு இடையே இரத்தக்களரி தரைப் போர்களின் காட்சியாக இருந்து வருகிறது. மெக்சிகோவில் நீண்ட காலமாக அதிக கொலைகள் நடந்த மாநிலமாக இந்த மாநிலம் பதிவாகியுள்ளது.  . இதற்கிடையில், கரீபியன் கடற்கரை […]

இலங்கை

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய 14 இந்திய மீனவர்கள் கைது!

  • December 18, 2023
  • 0 Comments

காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை இந்திய இழுவை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதைக் கண்டறிந்த வட கடற்படைக் கட்டளை இந்திய வேட்டையாடும் இழுவை படகுகளை விரட்டியடிக்க அதன் விரைவுத் தாக்குதல் கப்பலை அனுப்பியது. இந்த நடவடிக்கையில், 14 இந்திய மீனவர்களை கைது செய்ய கடற்படையினர்,  இழுவை படகையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட […]

இலங்கை

இலங்கை – கிருலப்பனையில் சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய போதகர்!

  • December 18, 2023
  • 0 Comments

கிருலப்பனை மகளிர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 63 வயதான போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பயன்படுத்திய ஆபாச காட்சிகளுடன் கூடிய கையடக்க தொலைபேசியையும் கிருலப்பனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தற்போது விடுதியில் தங்கியிருந்த 23 வயதுடைய யுவதி ஒருவரும், 11 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 8 சிறுமிகளும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த சிறுமிகளில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 6 சகோதரிகளும் அடங்குவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்தில் சிக்கியதில் மூவர் பலி!

  • December 18, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் சிறிய விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. ஒற்றை இயந்திரம் கொண்ட அந்த விமானம் நேற்று மாலை 5 மணியளவில், மின் இணைப்பு கம்பிகள் மீது திடீரென மோதி விபத்தில் சிக்கியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர் என CNN செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது. எனினும், அவர்களின் அடையாளங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. அவர்கள் அனைவரும் விமானத்தில் பயணித்தவர்களா? என்ற விவரமும் தெளிவாக தெரியவில்லை. இந்த விபத்து, போர்ட்லேண்ட் பகுதிக்கு தெற்கே 58 மைல்கள் […]

பொழுதுபோக்கு

இரண்டாவது திருமணம் குறித்து நடிகை சமந்தா சொன்ன பதில் என்ன தெரியுமா?

  • December 18, 2023
  • 0 Comments

முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. மாடலிங் துறையில் நுழைந்து 500 ரூபாய் சம்பளமாக பெற்று வந்தவர் அப்படி விளம்பரம், நாயகி என தனது உழைப்பால் உயர்ந்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டியவர் இப்போது பாலிவுட் சினிமாவிலும் கலக்க தொடங்கியுள்ளார். இவரது சினிமா பயணம் தற்போது பின்தங்கியுள்ளது காரணம் தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆக்டீவாக இல்லை. அதற்கு பதில் போட்டோ ஷுட் நடத்துவது, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என இருக்கிறார். அண்மையில் Tralala […]

இலங்கை

இலங்கை – கிரிபத்கொட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : CCTV காட்சிகள் வெளியானது!

  • December 18, 2023
  • 0 Comments

கிரிபத்கொட, காலா சந்தி பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று (18.12) அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தின் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளதாக […]