ஆசியா

மீண்டும் ஆப்கானிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவில் உணரப்பட்ட நிலநடுக்கம்

  • January 3, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 2.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காபூல் அருகே 29 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று நள்ளிரவில் அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பைசாபாத் அருகே ஏற்பட்ட இந்த […]

இலங்கை

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு பொதியில் வந்த 6 கோடி பெறுமதியான போதைப்பொருள்

  • January 3, 2024
  • 0 Comments

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான ஹஷிஸ் போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் உள்ள பொருட்களை அகற்றும் நிலையம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட பொதியில், போதைப்பொருள் இருந்ததை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார். உணவாக அறிவிக்கப்பட்ட அந்த பொதியில் 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான 4 கிலோ 91 கிராம் […]

இந்தியா

ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!! மது அருந்தி புத்தாண்டு கொண்டாடிய 7ம் வகுப்பு மாணவர்கள் – இணையத்தில் வைரலான வீடியோ

  • January 3, 2024
  • 0 Comments

ஆந்திராவில் 7ம் வகுப்பு மாணவர்கள் மது அருந்தி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சோடவரம் நகரில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்திலேயே அரசு விடுதியும் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர், கடந்த 31ம் திகதி இரவு புத்தாண்டு கொண்டாட […]

இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்லவை இரகசிய பொலிஸார் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் – நிலந்த ஜயதிஸ்ஸ!

  • January 3, 2024
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் முன்னாள் சுகாதார செயலாளர் வழங்கிய அறிக்கையின் பிரகாரம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவையும் இரகசிய பொலிஸார் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென தேசிய மக்கள் படையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட ரம்புக்வெல்ல அமைச்சருக்கு நெருக்கமான வைத்தியர் ஒருவர் சுகாதார ஊழியர்களுடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அவரை உடனடியாக இலங்கைக்கு அழைத்து […]

இலங்கை

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு

  • January 3, 2024
  • 0 Comments

ஜனாதிபதி வருகையினை முன்னிட்டு வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் தெரிவித்தார்.முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (03.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,ஜனாதிபதி வருகையினை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள புகையிரத கடவை காப்பாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளார்கள். இதனால் புகையிரத கடவைகளில் பயணிக்கும் மக்கள் அவதானமாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.04.01.2024 ஆம் […]

விளையாட்டு

இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர் தெரிவு

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டதாக இலங்கை தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (3) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உபுல் தரங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் குசல் மெண்டிஸ், டெஸ்ட் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் தலைவர் மற்றும் உப தலைவராக செயல்படுவார் என்றும் உபுல் தரங்க தெரிவித்துள்ளர். தில்ருவான் பெரேரா, […]

இலங்கை

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் பலி!

  • January 3, 2024
  • 0 Comments

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தநபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் அவருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றைய தினம் உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

பொழுதுபோக்கு

திடீரென லைட் ஆஃப்.. அலறிய ரம்பா… கடைசியில் பார்த்தா ரஜினிகாந்த்

  • January 3, 2024
  • 0 Comments

நடிகை ரம்பா அருணாச்சலம் படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் ரஜினிகாந்த் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார் என்பதை சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த், செளந்தர்யா நடித்த அருணாச்சலம் படத்தில் விசுவின் மகளாகவும் செகண்ட் ஹீரோயினாகவும் ரம்பா நடித்திருப்பார். ஆனால், அந்த படத்துக்கு பிறகு ரஜினிகாந்தின் எந்தவொரு படத்திலும் ரம்பா நடித்திருக்க மாட்டார். அதற்கு காரணம் அந்த படத்தில் அவருக்கு நேர்ந்த சில இன்னல்கள் தான் என்று சில தகவல்களை கிளப்பி விட்டுள்ளனர். […]

ஐரோப்பா

பின்லாந்து மற்றும் ஸ்வீடனில் மிகவும் குளிரான வெப்பநிலை பதிவு

பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வேயில் மிகவும் குளிரான காலநிலை பதிவாகியுள்ளது. பனி காரணமாக ரயில் போக்குவரத்து மற்றும் படகு பாதைகள் நிறுத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமையன்று பின்லாந்து மற்றும் ஸ்வீடனில் உள்ள தெர்மோமீட்டர்கள் சில இடங்களில் -40 டிகிரி செல்சியஸுக்குக் கீழே சரிந்தன, ஏனெனில் இரண்டு ஸ்காண்டிநேவிய நாடுகளும் இந்த குளிர்காலத்தில் இதுவரை குளிரான வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளன. “இந்தக் குளிர்காலத்தில் இதுவரை நாம் கொண்டிருந்த மிகக் குளிரான வெப்பநிலை இதுவாகும், மேலும் இது வடக்கில் தொடர்ந்து குளிர்ச்சியாக இருக்கும்” […]

இலங்கை

கிளிநொச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

  • January 3, 2024
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு மாதமாகப் பாதிக்கப்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் 13,897 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன் 4461 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கிளிநொச்சி மானாமடு நீர்த்தேக்கம் வடிந்தமையினால் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவிற்குள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அந்தப் பகுதியில் அதிகளவு நெற்செய்கைகள் அழிவடைந்துள்ளதாகவும்,  3000 ஏக்கருக்கும் அதிகமான நெற்செய்கைகள் காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி இராமநாதபுரம், அக்கராயன்குளம், முழங்காவில், கண்டாவளை, பரந்தன், பூநகரி, புளியன்பொக்கனே, உரத்திபுரம், பளை போன்ற […]