ஹமாஸின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் பலி : எந்தச் சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பகிரங்க அறிவிப்பு
ஹமாஸின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான சலே அல்-அரூரி பெய்ரூட்டில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இது ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் மற்றும் லெபனான் போராளிக் குழுவான ஹிஷ்புல்லாவுடன் மோதல் நிலையை தீவிரப்பப்படுத்தியுள்ளது. பெய்ரூட்டில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலிய இராணுவம் “எந்தச் சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதாக” கூறியுள்ளது. இந்தப் படுகொலையானது காசாவில் போர் ஒரு பரந்த பிராந்திய மோதலாக கொதித்துவிடக்கூடும் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது என்று ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள உயர்மட்ட […]













